search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே எஸ் பரத்
    X
    கே எஸ் பரத்

    இந்த வீரர் கடும் போட்டியாக விளங்கினார்: தேர்வுக்குழு தலைவர் பிரசாத்

    கர்நாடகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கேஎஸ் பரத் அணித்தேர்வின் போது கடும் போட்டியாக விளங்கினார் என தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுகிறது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் மட்டுமே கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்ய தேர்வுக்குழு முடிவு செய்தது. முதல் நபராக ரிஷப் பந்த்-ஐ தேர்வு செய்துவிட்டார்கள்.

    2-வது வீரராக யாரைத் தேர்வு செய்யலாம் என்பதில் நீண்ட விவாதம் நடைபெற்றுள்ளது. 19 மாதங்களாக காயத்தால் விளையாடாமல் இருந்து விருத்திமான் சகா தற்போது குணமடைந்து விட்டதால் அவரை எடுக்கலாமா? அல்லது உள்ளூர் தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் 25 வயதான ஆந்திராவைச் சேர்ந்த கேஎஸ் பரத்தை தேர்வு செய்யலாமா? என்பதுதான் அந்த விவாதம்.

    இறுதியில் அனுபவம் கைக்கொடுக்க சகா தேர்வு செய்யப்பட்டார். இதனால் கேஎஸ் பரத் கடும் போராட்டத்திற்குப் பின் தனது வாய்ப்பை இழந்துள்ளார்.

    இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘இந்திய ‘ஏ’ அணியின் பெர்பார்மன்ஸை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டோம். ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே ஆகியோர் இந்திய ‘ஏ’ அணியில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேபோல் நவ்தீப் சைனி சிறப்பாக விளையாடினார்.

    டெஸ்ட் போட்டிக்கான அணித் தேர்வில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கேஎஸ் பரத் கடும் போட்டியாளராக விளங்கினார். ஆனால், சகா அனுபவம் மற்றும் பெர்பார்மன்ஸ் அடிப்படையில் கேஎஸ் பரத்தை முந்தியுள்ளார். கேஎஸ் பரத் இந்திய ‘ஏ’ அணிக்காக கடைசி 11 போட்டிகளில் 686 ரன்கள் குவித்துள்ளார்.

    இதில் மூன்று சதங்கள், இரண்டு அரைசதங்கள் அடங்கும். அத்துடன் 41 கேட்ச்கள், 6 ஸ்டம்பிங் செய்துள்ளார். விதிமுறைப்படி சீனியர் அல்லது காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் அணியில் திரும்பி வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதன்படி சகாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கேஎஸ் பரத் கடும் போட்டியாளராக விளங்கினார்’’ என்றார்.
    Next Story
    ×