search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சகா"

    இந்திய அணியை சரிவில் இருந்து மீட்ட ஷ்ரேயாஸ் அய்யர், சகா அரைசதங்கள் விளாச நியூசிலாந்துக்கு 284 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 345 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 296 ரன்கள் சேர்த்தது.

    49 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மயங்க் அகர்வால் 4 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கினர். 

    புஜாரா 23 ரன்கள் எடுத்த நிலையிலும், மயங்க் அகர்வால் 17 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரகானே 4 ரன்னில் வெளியேறினார். முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த ஜடேஜா ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் இந்தியா 51 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    6-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இந்தியா 4-வது நாள் மதிய உணவு இடைவேளை 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. ஷ்ரேயாஸ் அய்யர் 18 ரன்களுடனும், அஸ்வின் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    உணவு இடைவேளை முடிந்த பின்னர் இருவரும் ஆட்டத்தை தொடங்கினர். அஸ்வின் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்திருந்தது.

    ஷ்ரேயாஸ் அய்யர்

    7-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் சகா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. ஷ்ரேயாஸ் அய்யர் 65 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். சகா அரைசதம் அடித்து 61 ரன்கள் எடுத்திருந்தபோது, இந்தியா 81 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்திருக்கும்போது, 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

    அப்போது சகா 126 பந்தில் 61 ரன்கள் எடுத்தும், அக்சார் பட்டேல் 67 பந்தில் 28 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர். டிம் சவுத்தி, ஜேசின் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தற்போது இந்தியா 283 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 284 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    முருகேஷ் இயக்கத்தில் கிஷோர், சரண், பக்கோடா பாண்டி, பிரித்விராஜன், ரவி வெங்கட்ராமன், ஸ்ரீ ராம், ஆயிரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சகா’ படத்தின் முன்னோட்டம். #Sagaa #SagaaFrom1stFeb
    செல்லி சினிமாஸ் சார்பில் ஆர்.செல்வகுமார், ராம் பிரசாந்த் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சகா’. பல முன்னணி விளம்பரங்களில் பணியாற்றிய முருகேஷ் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    17 வயது முதல் 22 வயதுக்குள் சிறையில் உள்ள இளைஞர்களின் நட்பு, காதல், ஏமாற்றம், பழி வாங்குதல் போன்றவைகளை கதை களமாக கொண்ட படமாக “சகா” உருவாகி இருக்கிறது. கிஷோர், சரண், பக்கோடா பாண்டி, ரவி வெங்கட்ராமன், ஸ்ரீ ராம், ஆயிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரித்திவிராஜன் முதன்முறையாக வில்லன் வேடம் ஏற்று நடிக்கிறார்.

    இசை & வரிகள் - ஷபிர், ஒளிப்பதிவு - நிரன் சந்தர், படத்தொகுப்பு - ஹரிஹரன், சண்டைப்பயிற்சி - கோட்டி, கலை ராஜூ, நடனம் - ஷெரிஃப் சதீஷ் சாண்டி, ஒலி வடிமைப்பாளர் - கீதா குரப்பா, தயாரிப்பு நிர்வாகம் - ஜெயக்குமார், தயாரிப்பு - ஆர்.செல்வகுமார் & ராம்பிரசாத், எழுத்து, இயக்கம் - முருகேஷ்



    படம் பற்றி இயக்குனர் முருகேஷ் கூறுகையில், “குற்றம் செய்து சிறையில் உள்ள இளைஞர்கள் புதிய வாழ்வை அடைய துடிக்கிறார்கள். அவர்களுக்கு வரும் தடைகளையும் அவர்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தையும் சகா திரைப்படத்தில் அப்பட்டமாக அப்படியே காட்டியுள்ளோம்” என்றார்.

    படம் பிப்ரவரி 1-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Sagaa #Kishore #Saran #PakodaPandi #PrithviRajan #SreeRaam #Aayira #3DaysToGoForSagaa #SagaaFrom1stFeb

    ஐபிஎல் 2019 சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை தக்கவைத்துள்ளது. சகாவை விடுவித்துள்ளது. #IPL2019
    ஐபிஎல் 2019 சீசனுக்கு 8 அணிகளும் தயாராகி வருகின்றன. அடுத்த மாதம் 18-ந்தேதி வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. அதற்கு முன் வீரர்களை மாற்றுவது, விடுவிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தன. இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

    நேற்றைய கடைசி நாள் அன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விக்கெட் கீப்பர் சகா, இங்கிலாந்து தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோடான், வெஸ்ட் இண்டீஸ் 20 கேப்டன் கார்லோஸ் பிராத்வைட் ஆகியோரை விடுவித்துள்ளது.



    அதேநேரத்தில் ஓராண்டு தடையால் கடந்த சீசனில் விளையாடாத ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை தக்கவைத்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தக்கவைத்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. பாசில் தம்பி, 2. புவனேஸ்வர் குமார், 3. தீபக் ஹூடா, 4. மணிஷ் பாண்டே, 5. டி நடராஜன், 6. ரிக்கி புய், 7. சந்தீப் ஷர்மா, 8. சித்தார்த் கவுல், 9. கோஸ்வாமி (விக்கெட் கீப்பர்), 10. கலீல் அஹமது. 11. யூசுப் பதான், 12. பில்லி ஸ்டேன்லேக், 13. டேவிட் வார்னர், 14. கேன் வில்லியம்சன், 15. முகமது நபி, 16. ரஷித் கான், 17. முகமது நபி, 18. ஷாகிப் அல் ஹசன்.

    விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரம்:-

    1. சச்சின் பேபி, 2. டான்மே அகர்வால், 3. விருத்திமன் சகா, 4. கிறிஸ் ஜோர்டான், 5. சகா, 6. கார்லோஸ் பிராத்வைட், 7. அலெக்ஸ் ஹேல்ஸ், 8. பிபுல் ஷர்மா, 9. மெஹிதி ஹசன்.
    இங்கிலாந்து தொடரில் ஆல்வுண்டரின் பங்களிப்பை இந்திய அணி தவறவிட்டு விட்டது என்று முன்னாள் வீரர் எல் சிவராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 1-3 இழந்தது.

    இந்நிலையில் ஆல்ரவுண்டரின் பங்களிப்பை இந்தியா தவற விட்டதுதான் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எல் சிவராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து எல் சிவராம கிருஷ்ணன் கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக அணி நிர்வாகம் புவனேஸ்வர் குமாரை பயன்படுத்தியிருக்க வேண்டும். அவர் இந்திய அணிக்கு மிகப்பெரிய பூஸ்ட் ஆக இருந்திருப்பார்.



    இந்தியா தொடரை இழப்பதற்கு ஆல்ரவுண்டர்களின் பங்களிப்பு முக்கிய காரணமாக அமைந்தது. ஹர்திக் பாண்டியாவை விட புவனேஸ்வர் குமார் அதிக ரன்கள் அடித்திருப்பார். அதேபோல்தான் சகா. இவர் அதிக அளவில் ‘பைஸ்’ ரன்கள் விட்டுக்கொடுத்திருக்க மாட்டார். அதேபோல் அதிக ரன்களும் குவித்திருப்பார். இருவரும் இடம் பிடித்திருந்தால் இந்தியாவை அதிக அளவில் பாதித்திருக்காது’’ என்றார்.
    இந்திய டெஸ்ட் அணி விக்கெட் கீப்பரான சகா, தோள்பட்டை காயத்திற்காக அறுவை சிகிக்சை மேற்கொள்ள இருக்கிறார். #Saha #BCCI
    இந்திய டெஸ்ட் அணியில் இருந்து எம்எஸ் டோனி ஓய்வு பெற்றதும் விருத்திமான் சகா விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற்று ஐபிஎல் தொடரில் சகா சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது இவரது பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவரால் பங்கேற்ற இயலவில்லை.

    இதற்கிடையே நீண்ட நாட்களாக அவரை அச்சுறுத்தி வந்த தோள்பட்டை காயத்திற்காக பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை மற்றும் பயிற்சியை மேற்கொண்டு வந்தார். ஆனால் அவரது தோள்பட்டை காயம் குணமடையவில்லை. இதனால் அறுவை சிகிச்சைதான் மேற்கொள்ள வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.



    இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘விருத்திமான் சகாவின் தோள்பட்டை காயத்திற்கான சிகிச்சை முற்றிலும் தவறாக சென்று விட்டது. தேசிய கிரிக்கெட் அகாடமியின் பிசியோ நேரம் வீணானதுதான் மிச்சம். மீண்டும் களத்திற்கு திரும்ப வேண்டுமென்றால் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டால், இரண்டு மாதத்திற்குப் பிறகுதான் பேட்டிங் செய்ய இயலும். அதன்பின் அவரது காயம் குணமடைவதற்கான வேலை தொடங்கும்’’ என்று தெரிவித்துள்ளது.
    ×