search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி பயிற்சியாளர்கள்
    X
    இந்திய அணி பயிற்சியாளர்கள்

    தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்: பிசிசிஐ வெளியிட்டது

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கான தகுதிகள் என்னென்ன? என்ற தகவலை வெளியிட்டது பிசிசிஐ.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரோடு தலைமை பயிற்சியாளர், துணைப் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை அவர்களின் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு விரும்புவோருக்கான விண்ணப்பத்தை பிசிசிஐ இன்று இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.

    அதில் ‘‘தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் 60 வயதை தாண்டியிருக்கக் கூடாது. ஐசிசி-யின் அசோசியேட் மெம்பர் அணி, ஏ அணி, ஐபிஎல் ஆகியவற்றில் ஏதாவது ஒரு அணியில் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

    அவர்கள் 60 வயதை தாண்டியிருக்கக் கூடாது. 30 டெஸ்ட் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர்கள் 10 டெஸ்ட் அல்லது 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தால் போதுமானது.

    ஜூலை 30-ந்தேதி வரை விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. ரவி சாஸ்திரி, பரத் ஸ்ரீதர், சஞ்சங் பாங்கர் ஆகியோர் மீண்டும் விண்ணப்பம் செய்தால் போதுமானது. அவர்களுக்கு தொடக்க நிலை தேர்வு நடத்தப்படாமல் நேரடியாக தேர்வுக்கான பட்டியலில் இடம் பிடிப்பார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×