search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ரசிகரின் உச்சகட்ட கோபம்
    X

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ரசிகரின் உச்சகட்ட கோபம்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ரசிகர், கோர்ட்டில் மனுவை தாக்கல்செய்துள்ளார். அது என்ன என்பதை பார்ப்போம்.
    லாகூர்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மான்செஸ்டரில் இந்தியா-பாகிஸ்தான் அணி மோதியது. இதில் பாகிஸ்தான் அணி, இந்திய அணியிடம் தோற்றது.

    இந்த தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின்  முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

    எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றை பாகிஸ்தான் அணி பற்றி நினைத்து பார்க்க முடியும் எனும் நெருக்கடி நிலைக்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது.



    இதனையடுத்து வெறுப்படைந்த பாகிஸ்தான் வீரர்கள் பலரும் தங்கள் அணியின் மீதான கோபத்தினை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் ரசிகர்  ஒருவர் கோபத்தின் உச்சத்திற்கேச் சென்றுள்ளார்.



    பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் குஜ்ரன்வாலா கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், ‘பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டும்.

    பாகிஸ்தான் அணிக்கு வீரர்களை நியமிக்கும் இன்சமாம் உல் ஹக் தலைமையிலான கிரிக்கெட் கவுன்சிலை கலைக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.  

    இந்த மனுவை பரிசீலித்த குஜ்ரன்வாலா கோர்ட்டின் நீதிபதி, இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.



    Next Story
    ×