
நாளை நாட்டிங்காமில் நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போட்டிக்கும் இடையில் மூன்று நாட்கள் ஓய்வு இருந்தது. இந்த ஓய்வை பயன்படுத்தி இந்திய அணியில் இடம் பிடித்துள்ள கேதர் ஜாதவ், எம்எஸ் டோனி, ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவான், கேஎல் ராகுல் ஆகியோர் சல்மான் கான் நடித்துள்ள பாரத் படத்தை பார்த்து ரசித்துள்ளனர். இதை கேதர் ஜாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
தனது படத்தை பார்த்து ரசித்த இந்திய அணி வீரர்களுக்கு சல்மான் கான் நன்றி தெரிவித்துள்ளார்.