search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    692 ரன்களுடன் வார்னர் ஆரஞ்சு தொப்பி, 25 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடாவுக்கு பர்பிள் தொப்பி
    X

    692 ரன்களுடன் வார்னர் ஆரஞ்சு தொப்பி, 25 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடாவுக்கு பர்பிள் தொப்பி

    ஐபிஎல் தொடரில் 12 ஆட்டத்தில் 692 ரன்கள் குவித்த டேவிட் வார்னர் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். ரபாடாவுக்க பர்பிள் தொப்பி கிடைத்துள்ளது. #IPL2019
    ஐபிஎல் 12-வது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற 56 லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிகளும் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும்.

    இந்த லீக் ஆட்டங்களில் அதிக ரன்கள் குவிக்கும் பேட்ஸ்மேனுக்கு ஆரஞ்சு தொப்பிகளும், அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்படும்.

    அதன்படி 12 போட்டிகளில் ஒரு சதம், 8 அரைசதங்களுடன் 692 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். 12 போட்டிகளில் 25 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடா பர்பிள் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.



    லோகேஷ் ராகுல் 14 போட்டியில் 1 சதம், 6 அரைசதங்களுடன் 593 ரன்கள் குவித்து 2-வது இடத்தை பிடித்துள்ளார். அந்த்ரே ரஸல் 510 ரன்னுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 14 ஆட்டத்தில் 21 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தையும், ராஜஸ்தான ராயல்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஷ்ரேயாஸ் கோபால் 20 விக்கெட்டுக்களும், 3-வது இடத்தையும், முகமது ஷமி 19 விக்கெட்டுக்களுடன் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
    Next Story
    ×