search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேவிட் வார்னர்"

    • ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அவரின் 29 ஆவது படத்தின் வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார்.
    • ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னருடன் விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

    பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர் போன்ற மிகப்பெரிய படங்களை இயக்கியவர் ராஜமௌலி. ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அவரின் 29 ஆவது படத்தின் வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார்.

    ராஜமௌலி  தற்பொழுது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னருடன் விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

    அதில் டேவிட் வார்னரிடம் அவர் விளையாடும் மேட்சைப் பார்க்க டிக்கெட் டிஸ்கவுண்ட் கேட்கிறார். அதற்கு அவர் கிரெட் ஆப் இருந்தால் கிடைக்கும் என கூறுகிறார். அதற்கு ராஜமௌலி  அது இல்லை என்றால் என்ன செய்வது என கேட்கிறார். அதற்கு டேவிட் வார்னர் அவருக்கு ஒரு உதவி செய்யுமாறு கேட்கிறார்.

     

    அதற்கு பிறகுள்ள காட்சிகள் மிக நகைச்சுவையாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. டேவிட் வார்ன்ர் நம் இந்திய சினிமாவில் நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என காட்சி படுத்துயுள்ளனர். இந்த விளம்பர படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 213 ரன்களைக் குவித்துள்ளது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ரன்களில் 202 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்துள்ளது. டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 70 ரன்கள் குவித்தார். இங்கிலிஸ் 39 ரன்னும், டிம் டேவிட் 37 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரசல் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 53 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜான்சன் சார்லஸ் 43 ரன்னில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டும், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 213 ரன்களைக் குவித்துள்ளது.

    சிட்னி:

    வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றன. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் 3-0 என ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அதிரடியாக ஆடினார். அவர் 36 பந்தில் ஒரு சிக்சர், 12 பவுண்டரி உள்பட 70 ரன்கள் குவித்து அவுட்டானார். இங்கிலிஸ் 39 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி கட்டத்தில் டிம் டேவிட், மேத்யூ வேட் ஜோடி அதிரடியாக ஆடி 50 ரன்களுக்கும் மேல் குவித்தது. டிம் டேவிட் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரசல் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.

    • டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
    • தற்போது பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் முக்கியமான வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். இந்த மாதம் தொடக்கத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆனால், டி20-யில் மட்டும் விளையாடுவதாக அறிவித்துள்ளார்.

    தற்போது ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இன்று சிட்னி மைதானத்தில் சிட்னி தண்டர்- சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின.

    சிட்னி தண்டர் அணிக்காக டேவிட் வார்னர் விளையாடி வருகிறார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்திற்குள் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்து தரையிறங்கியது. போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள் என்னடா? மைதானத்திற்குள் ஹெலிகாப்டர் தரையிறங்குகிறது என அச்சமைடந்தனர்.

    ஆனால் ஹெலிகாப்டரில் இருந்து டேவிட் வார்னர் ஹாலிவுட் பட பாணியில் ஒய்யாரமாக இறங்கி வந்தார். இதனால் ஆச்சர்யம் அடைந்த ரசிகர்களுக்கு டேவிட் வார்னர் ஏன் ஹெலிகாப்டர் மூலம் வர வேண்டும்? என்ற கேள்வி எழுந்தது.

    டேவிட் வார்னரின் சகோதரர் திருமணம் ஹன்டர் பள்ளத்தாக்கில் நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்ட பிறகு போட்டி நடைபெறும் இடத்திற்கு வாகனத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவது இயலாத காரியம். இதனால் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ளார்.

    கிரிக்கெட்டால் மட்டுமல்ல பொழுதுபோக்கு போன்ற செயல்களாலும் ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் டேவிட் வார்னர்.

    • 112 டெஸ்டில் விளையாடி 8786 ரன் எடுத்துள்ளார். சராசரி 44.59 ஆகும்.
    • அவரது அதிகபட்ச ஸ்கோர் 334 ரன் ஆகும்.

    உலகின் சிறந்த அதிரடி தொடக்க வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான சிட்னியில் நடந்த போட்டி அவரது கடைசி டெஸ்டாகும். தனது கடைசி இன்னிங்சில் அவர் 57 ரன்கள் எடுத்தார். 75 பந்தில் 7 பவுண்டயுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.

    37 வயதான வார்னர் 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்டில் அறிமுகம் ஆனார். அவர் 112 டெஸ்டில் விளையாடி 8786 ரன் எடுத்துள்ளார். சராசரி 44.59 ஆகும். 26 சதமும், 37 அரை சதமும் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 334 ரன் ஆகும். 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் இந்த ரன்னை குவித்தார்.

    வார்னர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இதை அவர் சமீபத்தில்தான் அறிவித்தார். 20 ஓவர் போட்டியில் மட்டுமே அவர் விளையாடுவார்.

    • பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்க உள்ளது.
    • உங்களுக்கு அது போன்ற பை தான் வேண்டும் என நினைக்கிறேன்., என்னிடம் ஒரு பை உள்ளது, அதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் கடைசி போட்டி சிட்னியில் நாளை நடைபெற உள்ளது. அதற்காக மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு சென்ற போது இடையே அவரது பை காணாமல் போயுள்ளது.

    அந்தப் பையில் டேவிட் வார்னரின் டெஸ்ட் போட்டிகளில் அணியும் தொப்பி உள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களை பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளுக்கு என பிரத்யேகமாக அளிக்கப்படும் பச்சை நிற தொப்பி அவர்களுக்கு மிகப் பெரும் கவுரவமான ஒன்று.

    திருடப்பட்ட அந்த பையில் அவரது இரண்டு பச்சை நிற தொப்பி உள்ளது. அதில் ஒன்று அவருக்கு முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன போது அளிக்கப்பட்டது. அதை அணிந்து தன் கடைசி போட்டியில் ஆட வேண்டும் என நினைத்து இருந்த வார்னர் தற்போது சோகத்தில் இருக்கிறார்.

    இந்த நிலையில் முகம் தெரியாத திருடனிடம் டேவிட் வார்னர் உருக்கமான வேணடுகோளை விடுத்து கோரிக்கை வைத்து இருக்கிறார் வார்னர்.

    அவர் தனது பையை திரும்ப ஒப்படைக்குமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். "என் லக்கேஜில் இருந்து என் பையை யாரோ ஒருவர் எடுத்து இருக்கிறார்கள். அதில் என் குழந்தைகளுக்கு வாங்கிய சில பரிசுப் பொருட்கள் உள்ளன. அதில் தான் என் பச்சை நிற தொப்பியும் உள்ளது. அது எனக்கு உணர்வுரீதியான ஒன்று. என் கடைசி டெஸ்ட் போட்டியில் அதை அணிந்து செல்ல வேண்டும் என விரும்புகிறேன். உங்களுக்கு அது போன்ற பை தான் வேண்டும் என நினைக்கிறேன்., என்னிடம் ஒரு பை உள்ளது, அதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது.

    இவ்வாறு வார்னர் கூறினார்.

    • 161 ஒருநாள் போட்டிகளில் 6932 ரன்கள் குவித்துள்ளார்.
    • ஒரு போட்டியில் 179 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடது கை பேட்ஸ்மேனான டேவிட் வார்னரின் ஆட்டம் குறித்து சமீப காலமாக விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் முடிவடைந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சிட்னியில் 3-ந்தேதி தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிதான் அவரது கடைசி போட்டியாகும்.

    இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. தொடக்க வீரரான வார்னர் சிறப்பான பங்களிப்பை அணிக்கு வழங்கினார்.

    இரண்டு முறை உலகக்கோப்பையை வாங்கிய அணியில் இடம பிடித்துள்ளார். 161 ஒருநாள் போட்டிகளில் 6932 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 45.30 ஆகும். ஸ்டிரைக் ரேட் 97.26. ஒரு நாள் போட்டியில் 179 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 22 சதங்கள், 33 அரைசதங்கள் அடித்துள்ளார்.

    ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.

    • ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
    • தொடக்க வீரரான வார்னர் 38 ரன்னில் அவுட் ஆனார்.

    மெல்போர்ன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் பெர்த் நகரில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ஜமால், சல்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

    இந்த போட்டியில் தொடக்க வீரரான வார்னர் 38 ரன்னில் அவுட் ஆனார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஸ்டீவ் வாக்கை (18496) பின்னுக்கு தள்ளி டேவிட் வார்னர் (18515) 2-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் ரிக்கி பாண்டிங் உள்ளார். அவர் 27368 ரன்கள் எடுத்து யாரும் தொட முடியாத இடத்தில் உள்ளார்.

    • ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை 6.80 கோடிகள் கொடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் வாங்கியது.
    • சன்ரைசர்ஸ் நிர்வாகம் தம்மை பிளாக் செய்திருப்பதை அறிந்து டேவிட் வார்னர் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தார்.

    துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை 6.80 கோடிகள் கொடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் வாங்கியது.

    இந்நிலையில் சக அணி வீரரான திராவிஸ் ஹெட்டை பாராட்ட நினைத்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு சன்ரைசர்ஸ் அணி ஷாக் கொடுத்துள்ளது.

    அது என்னவென்றால் 6.8 கோடிக்கு விலை போன ஹெட்டை வாழ்த்துவதற்காக சன் ரைசர்ஸ் அணி நிர்வாகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வார்னர் தேடியுள்ளார். ஆனால் அப்போது தான் சன்ரைசர்ஸ் நிர்வாகம் தம்மை பிளாக் செய்திருப்பதை அறிந்து டேவிட் வார்னர் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தார்.

    அது பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து டேவிட் வார்னர் ஏமாற்றத்துடன் பகிர்ந்துள்ளார். அதில், டிராவிஸ் ஹெட் பற்றிய பதிவை பதிவிடுவதற்காக நான் முயற்சித்தேன். ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் என்னை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் செய்துள்ளார்கள். அது மட்டுமில்லாமல் எக்ஸ் தள பக்கத்திலும் சன்ரைசர்ஸ் நிர்வாகம் தம்மை பிளாக் செய்துள்ளதை வார்னர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு கேப்டனாக சன்ரைசர்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த வார்னர் 2019 வரை அனைத்து தொடர்களில் 500-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் 164 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 26-வது சதத்தை அவர் பதிவு செய்தார்.

    ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் விளையாடுகிறது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 346 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 16 பவுண்டரி 4 சிக்சருடன் 164 ரன்கள் குவித்து அவுட்டானார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 26-வது சதத்தை அவர் பதிவு செய்தார்.

    குறிப்பாக இத்தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அவர் தன்னுடைய கடைசி தொடரின் முதல் போட்டியிலேயே சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ்க்கு நிகராக 26 சதங்களை அடித்த வீரராக வார்னர் சாதனை படைத்துள்ளார். அதை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த 3-வது வீரர் என்ற பிரைன் லாரா சாதனையை அவர் முறியடித்துள்ளார். அந்த பட்டியலில், 12 சதங்களுடன் குமார் சங்ககாரா முதல் இடத்திலும் 11 சதங்களுடன் அரவிந்தா டீ சில்வா 2-வது இடத்திலும் 10 சதங்களுடன் டேவிட் வார்னர் 3-வது இடத்திலும் 9 சதங்களுடன் பிரையன் லாரா 4-வது இடத்திலும் உள்ளனர்.

    குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 8 இன்னிங்ஸில் 5 சதம் உட்பட வார்னர் 1009* ரன்களை 144.14 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேத்தியூ ஹெய்டன் (8643), மைக்கேல் க்ளார்க் (8625) ஆகிய ஜாம்பவான்களை முந்தி அதிக ரன்கள் அடித்த 5-வது ஆஸ்திரேலிய வீரராகவும் டேவிட் வார்னர் (8651*) சாதனை படைத்துள்ளார். 

    • மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது.
    • கவாஜா 41 ரன்னிலும், லபுசேன் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை பெர்த் நகரில் தொடங்கியது.

    பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால், குர்ரம் ஷாஜாத் ஆகியோர் அறிமுகமானார்கள். டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா களம் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடினர். தொடக்க ஜோடி, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது.

    குறிப்பாக டேவிட் வார்னர் பவுண்டரிகளை விளாசினார். இதனால் ஆஸ்திரேலியாவின் ரன் வேகம் அதிகரித்தது. வார்னர் 41 பந்தில் அரை சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக கவாஜா நிதானமாக விளையாடினார். இதனால் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது.

    முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 25 ஓவரில் 117 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் 72 ரன்களுடனும், காவாஜா 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. கவாஜா 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசேன் 16 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் சுமித் ஜோடி சேர்ந்தார்.

    ஒரு பக்கம் இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் மறுமுனையில் டேவிட் வார்னர் 125 பந்தில் 14 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசினார். இவரது சதத்தால் ஆஸ்திரேலிய தேனீர் இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் சேர்த்தது.

    தற்போது ஆஸ்திரேலியா 54 ஓவரில் 230 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    • சென்னையின் பல பகுதிகளை வெள்ளம் பாதித்துள்ளது.
    • இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரை பற்றிதான் எனது எண்ணங்கள் உள்ளன.

    ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் இந்திய ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய வீரர்கள் மீதும் பற்று கொண்டவர். ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம் பெற்று விளையாடிய வார்னர், சென்னை அணியில் இடம் பெற்று விளையாடிய ரவீந்திர ஜடேஜா போன்று வாள் சுற்றி காண்பித்தார்.

    புஷ்பா பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நடனம் ஆடி காண்பித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். இப்படி இந்திய ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தவர் வார்னர்.


    இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு இன்ஸ்டாகிராமில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சென்னையின் பல பகுதிகளை வெள்ளம் பாதித்துள்ளது. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரை பற்றிதான் எனது எண்ணங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம், தேவைப்பட்டால் உயரமான இடத்தில் பாதுகாப்பாக இருங்கள்.

    நீங்கள் உதவக்கூடிய நிலையில் இருந்தால், நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதையோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவிகளை வழங்குவதையோ பரிசீலிக்கவும். நம்மால் முடிந்தவரை ஆதரவளிக்க ஒன்றுபடுவோம்.

    இவ்வாறு வார்னர் கூறினார்.



    ×