என் மலர்

  செய்திகள்

  கொல்கத்தா அதிரடியை டெல்லி சமாளிக்குமா?
  X

  கொல்கத்தா அதிரடியை டெல்லி சமாளிக்குமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
  தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளது. அந்த அணியில் கிறிஸ் லின், உத்தப்பா, சுனில் நரைன், நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரஸல், குல்தீப் யாதவ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அதிரடி மன்னன் ரஸ்சல் அணிக்கு முதுகெலும்பாக உள்ளார். அவர் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடுவது அந்த அணிக்கு பலமாக உள்ளது.

  இன்று அவர் சிக்சர் மழையை பார்கக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா 108 ரன்னில் சுருண்டது. இதனால் அந்த அணி முன்வரிசை பேட்டிங்கில் கவனம் செலுத்துவது அவசியம்.

  இரு அணிகளும் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் டெல்லி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு பழி தீர்க்க கொல்கத்தா தீவிரமாக உள்ளது.  ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி 6 ஆட்டத்தில் 3 வெற்றி 3 தோல்வி பெற்று உள்ளது. அந்த அணியில் ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரி‌ஷப் பந்த், இங்க்ராம், கிறிஸ் மோரிஸ், அக்சார் பட்டேல், ரபாடா போன்ற வீரர்கள் உள்ளனர்.

  இந்த தொடரில் ஏற்கனவே கொல்கத்தாவை வீழ்த்தி உள்ளதால் டெல்லி நம்பிக்கையுடன் உள்ளது. ஆனாலும் பலம் வாய்ந்த கொல்கத்தாவுக்கு எதிராக டெல்லி முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியம்.
  Next Story
  ×