search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோலி, ரகானே அரை சதம் - தேனீர் இடைவேளையில் இந்தியா 189/3
    X

    கோலி, ரகானே அரை சதம் - தேனீர் இடைவேளையில் இந்தியா 189/3

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் தேனீர் இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND #INDvENG
    நாட்டிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் இறங்கினர். 
    இந்த ஜோடி மிகவும் நிதானமாக ஆடி அரை சதத்தை கடந்தது. அணியின் எண்ணிக்கை 60 ஆக இருக்கும்போது ஷிகர் தவான் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து புஜாரா களமிறங்கினார்.

    சிறிது நேரத்தில் பொறுமையுடன் விளையாடிய லோகேஷ் ராகுல் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய புஜாராவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 14 ரன்களில் வெளியேறினார்.

    முதல் நாள் உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 26.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    உணவு இடைவேளைக்கு பிறகு களமிறங்கிய ரகானே விராட் கோலிக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.

    இருவரும் நிதானமாக விளையாடினர். எளிதான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டவும் தவறவில்லை.

    விராட் கோலி தனது 18-வது அரை சதத்தை கடந்தார். அவடன் ஆடிய ரகானேவும்  13-வது அரை சதத்தை கடந்தார். இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.

    இந்திய அணி தேனீர் இடைவேளை வரை 56 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 51 ரன்களுடனும், ரகானே 53 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  #ENGvIND #INDvENG
    Next Story
    ×