search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக லெவன் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்- முகமது ஷமி சேர்ப்பு
    X

    உலக லெவன் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்- முகமது ஷமி சேர்ப்பு

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான உலக லெவன் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார். முகமது ஷமி, அடில் ரஷித் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    வெஸ்ட் இண்டீஸ் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 31-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான உலக லெவன் அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பிடித்திருந்தார். தற்போது வைரஸ் காய்ச்சல் காரணமாக அவர் அணியில் இருந்து விலகியுள்ளார்.



    இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் அடில் ரஷித் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். உலக லெவன் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மோர்கன் (கேப்டன்), 2. அப்ரிடி, 3. தமிம் இக்பால், 4. தினேஷ் கார்த்திக், 5. ரஷித் கான், 6. சந்தீப் லாமிச்சேன், 7 மெக்கிளேனகன், 8. சோயிப் மாலிக், 9. திசாரா பெரேரா, 10, லூக் ரோஞ்சி, 11. அடில் ரஷித், 12. முகமது ஷமி.
    Next Story
    ×