என் மலர்

  செய்திகள்

  வெ.இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி
  X

  வெ.இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  நெல்சன்:

  வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் நியூசிலாந்து கைப்பற்றியது.

  மூன்று 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் இன்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது. புதுமுக வீரர் பிலிப்ஸ் 40 பந்தில் 55 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), முன்ரோ 37 பந்தில் 53 ரன்னும் (6 பவுண்டரி, 2சிக்சர்) எடுத்தனர். பிராத்வெயிட், டெய்லர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

  188 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் விக்கெட்டுகளை இழந்து திணறியது. 19-வது ஓவரில் அந்த அணி 140 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டம் ஜனவரி 1-ந்தேதி நடக்கிறது.
  Next Story
  ×