search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது ஒருநாள்: ஆஸி. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு; இந்திய அணியில் 3 மாற்றங்கள்
    X

    4-வது ஒருநாள்: ஆஸி. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு; இந்திய அணியில் 3 மாற்றங்கள்

    பெங்களூருவில் நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்கும். ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.



    இந்திய அணியில் குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு அக்சார் பட்டேல், உமேஷ் யாதவ் மற்றும் மொகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேக்ஸ்வெல், ஆஷ்டோன் அகர் நீக்கப்பட்டு விக்கெட் கீப்பர் வடே மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சம்பா சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. வார்னர், 2. ஆரோன் பிஞ்ச், 3. ஸ்மித் (கேப்டன்), 4. ஹேண்ட்ஸ்காம்ப், 5. ட்ராவிஸ் ஹெட், 6. ஸ்டாய்னிஸ், 7. வடே (விக்கெட் கீப்பர்), 8. கம்மின்ஸ், 9. கவுல்டர் நைல், 10. சம்பா, 11. ரிச்சார்ட்சன்.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரகானே, 2. ரோகித் ஷர்மா, 3. விராட் கோலி (கேப்டன்), 4. மணீஷ் பாண்டே, 5. கேதர் ஜாதவ், 6. ஹர்திக் பாண்டியா, 7. டோனி (விக்கெட் கீப்பர்), 8. அக்சார் பட்டேல், 9. உமேஷ் யாதவ், 10. மொகமது ஷமி, 11. சாஹல்.
    Next Story
    ×