என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி 2017: தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி
Byமாலை மலர்19 Aug 2017 5:48 PM GMT (Updated: 19 Aug 2017 5:48 PM GMT)
புரோ கபடி போட்டியில் இன்று நடந்த லீக் சுற்று ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
லக்னோ:
5-வது புரோ கபடி 'லீக்' போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காம் கட்டமாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோ நகரில் நேற்று தொடங்கியது.
இன்று (19-ம் தேதி) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் யூ மும்பா அணியும் மோதின. இந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-32 என்ற புள்ளிக்கணக்கில் யூ மும்பா அணியை வீழ்த்தியது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி கேப்டன் ராகுல் சவுத்ரி 13 புள்ளிகள் எடுத்தார்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற தெலுங்கு டைட்ட்ன்ஸ் அணி 'பி' பிரிவு புள்ளிப்பட்டியலில் 17 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது. மும்பை அணி 16 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
அதன்பின் நடைபெற்ற மற்றொரு போட்டியில் உ.பி. யோத்தா - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் அரியானா அணி 36-29 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. அரியானா அணியின் விகாஸ் கண்டோலா அதிகபட்சமாக 9 புள்ளிகள் எடுத்தார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற அரியானா அணி 13 புள்ளிகளிடன் 'ஏ' பிரிவில் நான்காம் இடத்தில் உள்ளது. உ.பி. 24 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
நாளை (20-ம் தேதி) நடைபெறும் போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ் - புனேரி பால்டன் அணிகளும், உ.பி. யோத்தா - ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணிகளும் பலப்பரிட்சை செய்ய உள்ளன.
Next Story
×