என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பயிற்சியாளர் மீது புகார் கூறிய உமர் அக்மல் மீது பாக். கிரிக்கெட் வாரியம் கடும் தாக்கு
Byமாலை மலர்19 Aug 2017 12:39 PM GMT (Updated: 19 Aug 2017 12:39 PM GMT)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மீது புகார் கூறிய உமர் அக்மலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையாக கண்டித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்தவர் உமர் அக்மல். ஆனால் உடற்தகுதியை நிரூபிக்க தவறியதால் அணியில் இருந்து அவரை திரும்பப் பெற வேண்டும் என்று தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் வலியுறுத்தியிருந்தார். இதனால் மிக்கி ஆர்தர் மீது உமர் அக்மல் அதிருப்தியில் இருந்தார்.
மிக்கி ஆர்தர் குறித்து உமர் அக்மல் அளித்த பேட்டியில், ‘‘எனது உடல் தகுதி பிரச்சினையை சரி செய்ய பயிற்சியாளர் மிக்கி ஆர்தரை அணுகிய போது அவர் என்னை மோசமான வார்த்தைகளால் திட்டினார். இன்சமாம் உல் ஹக், முஸ்தாக் அகமது ஆகியோர் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்தது. அத்துடன் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நான் பயிற்சி செய்யவும் அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டார்.
எந்தவொரு போட்டியாக இருந்தாலும் அவர் யாரையாவது ஒருவரை திட்டிக் கொண்டுதான் இருப்பார். அவரது இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இதனையடுத்து அனுமதி இல்லாமல் மீடியாக்களிடம் பேசியதற்கு விளக்கம் அளிக்கும்படி உமர் அக்மலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் உமர் அக்மல் மீது கடும் விமர்சனம் வைத்துள்ளது.
உமர் அக்மல் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் ‘‘தேசிய கிரிக்கெட் அணியின் நிர்வாகத்தினர் மீது குற்றம்சாட்டுவதன் மூலம் உமர் அக்மல் தன்மீதான குற்றத்தை திசை திருப்ப பார்க்கிறார்.
தனது உடற்தகுதியை நிரூபிக்கவும், வீரர்களிடையே அடிக்கடி தகராறில் ஈடுபடுவதை நிறுத்தவும் அவருக்கு 7 முறைக்கு மேல் வாய்ப்பு வழங்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பும் மற்ற வீரர்களுக்கு செய்யப்படும் உடற்தகுதி அவருக்கும் செய்யப்பட்டது. அதில் அவர் தோல்வியடைந்ததால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எப்போதுமே, ஒரு சர்வதேச தொடருக்கு முன் வீரர்கள் அனைவரும் அணி பயிற்சியாளரிடம் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அதன்படிதான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் வீரர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. ஒருமுறை அவர் தனது உடற்தகுதியை நிரூபிக்க தவறியதால், அணியில் இருந்து நீக்கப்பட்டார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
×