என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்தியாவின் ஆதிக்கம் நீடிக்குமா?: முதல் ஆட்டம் நாளை நடக்கிறது
Byமாலை மலர்19 Aug 2017 5:24 AM GMT (Updated: 19 Aug 2017 5:24 AM GMT)
இந்தியா-இலங்கை இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் தமுல்லாவில் நாளை நடக்கிறது. டெஸ்ட் தொடரை போலவே ஒருநாள் தொடரிலும் இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமுல்லா:
வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டி தொடரில் இந்தியா 3 டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது.
இந்தியா-இலங்கை இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் தமுல்லாவில் நாளை (20-ந்தேதி) நடக்கிறது.
டெஸ்ட் தொடரை போலவே ஒருநாள் தொடரிலும் இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள். ஒருநாள் தொடரையும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.
இரு அணிகளும் கடைசியாக கடந்த ஜூன் மாதம் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மோதின. இதில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுத்து வெற்றியுடன் கணக்கை தொடங்கும் நிலையில் இந்திய வீரர்கள் உள்ளனர்.
தவானும், ரோகித் சர்மாவும் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள். இதில் தவான் டெஸ்ட் தொடரில் முத்திரை பதித்தார். இதனால் அவர் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது. கேப்டன் வீராட்கோலி, முன்னாள் கேப்டன் டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, ரகானே, கேதர் ஜாதவ், மனிஷ்பாண்டே போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.
ஆல் ரவுண்டர்களான அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல் ஆகியோர் அவர்களது இடத்தை பூர்த்தி செய்வார்கள். வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா, புவனேஷ்வர்குமார் உள்ளனர்.
டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி ஒருநாள் தொடரிலாவது வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. உபுல் தரங்கா தலைமையிலான அந்த அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கிறது.
மலிங்கா அந்த அணியின் பவுலிங்கில் முக்கிய பங்கு வகிப்பார். ஆல்ரவுண்டர் திசாரா பெரைரா மீதும் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது. இலங்கை அணி சமீபத்தில் சொந்த மண்ணில் ஜிம்பாப்வேயிடம் தோற்றதால் நெருக்கடியில் உள்ளது. உலககோப்பைக்கு நேரடியாக தகுதி பெற இந்த தொடரில் 2 ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற வேண்டும்.
இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி டென் 3 மற்றும் தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், ரகானே, ராகுல், கேதர்ஜாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, டோனி, மணிஷ் பாண்டே, அக்ஷர் பட்டேல், புவனேஸ்வர்குமார், குல்தீப் யாதவ், பும்ரா, யசுவேந்திர சஹால், ஷர்துல்தாக்கூர்.
இலங்கை: உபுல் தரங்கா (கேப்டன்), மேத்யூஸ், குணதில்கா, கபுகேந்திரா, குஷால் மெண்டீஸ், திசாரா பெரைரா, டிக்வெலா, பெர்னாண்டோ, ஹசரன்கா, தனஞ்செயா, சமீரா, மலிங்கா, புஷ்பக்குமாரா, சன்டகன், மிலின்டா ஸ்ரீவர்த்தனா.

Next Story
×