search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை அணிகள்  நாளை மோதல்
    X

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை அணிகள்  நாளை மோதல்

    டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5-வது ஆட்டத்தில் மதுரை சூப்பர் ஜெயன்ட் அணியை நாளை சந்திக்கிறது.
    சென்னை:

    டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 3 இடங்களில் நடைபெற்று வருகிறது.

    அறிமுக டி.என்.பி.எல். போட்டியில் 2-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நெல்லையில் நடந்த தனது முதல் ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்சை 6 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னையில் நடந்த 2-வது ஆட்டத்தில் கோவை கிங்சை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

    நெல்லையில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்சிடம் 27 ரன் வித்தியாசத்தில் தோற்றது. சென்னையில் நேற்று நடந்த 4-வது ஆட்டத்தில் காரைக்குடி காளையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5-வது ஆட்டத்தில் மதுரை சூப்பர் ஜெயன்ட் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னையில் நாளை (6-ந் தேதி) இரவு 7.15 மணிக்கு நடக்கிறது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மதுரையை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது.

    பேட்டிங்கில் கோபிநாத், தலைவன் சற்குணம், கார்த்திக், சசிதேவ் ஆகியோரும், பந்து வீச்சில் சாய் கிஷோர், அலெக்சாண்டர், யோமகேஷ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஆல் ரவுண்டர் வரிசையில் கேப்டன் சதீஷ், அந்தோணிதாஸ் உள்ளனர்.

    மதுரை அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. கடந்த தொடரில் 7 போட்டியிலும் தோற்ற அந்த அணி தற்போது தான் ஆடிய 3 ஆட்டத்திலும் தோற்றுள்ளது.

    இன்று (சனிக்கிழமை) 2 ஆட்டம் நெல்லையில் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணிகளும், இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- திருவள்ளூர் வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன.
    Next Story
    ×