என் மலர்

  செய்திகள்

  டி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி வெற்றி
  X

  டி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 15-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தூத்துக்குடி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
  திருநெல்வேலி:

  தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 15-வது லீக் ஆட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்தியன் சிமென்ட் கம்பெணி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பேட் செய்தது.

  கோவை கிங்ஸ் அணியில் ரஞ்சன் பால் மற்றும் சூர்யபிரகாஷ் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ரஞ்சன் பால் ஏழு பந்துகளில் மூன்று ரன் மட்டும் குவித்து ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரரான சூர்யபிரகாஷ் ஏழு ரன்னில் ஆட்டமிழந்து மேலும் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

  துவக்கமே தடுமாற்றமாய் அமைந்த நிலையில் அனிருத் சீதா ராம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 22 பந்துகளில் மூன்று பவுண்டரிகளை விளாசிய அனிருத் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரரான தீபன் லிங்கேஷ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.  பின் களமிறங்கிய ஸ்ரீனிவாசன் மற்றும் ஹரிஷ் குமார் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஸ்ரீனிவாசன் 36 பந்துகளில் ஏழு பவுண்டரி, ஒரு சிக்சர் என 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரிஷ் குமார் 16 பந்துகளில் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து மொத்தம் 33 ரன்களை குவித்தார். இருபது ஓவர்கள் முடிவில் கோவை கிங்ஸ் அணி 6 விகிகெட் இழப்பிற்கு 160 ரன்களை குவித்தது. கோவை அணி சார்பில் ஹரிஷ் குமார் மற்றும் மொகமது ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

  இருபது ஓவர்களில் 161 என்ற இலக்கை துரத்திய ஆல்பெர்ட் டியூட்டி பேட்ரியாட்ஸ் அணியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் கே.எம். காந்தி துவக்க வீரர்களாக களமிறங்கினர். வாஷிங்டன் சுந்தர் 27 பந்துகளில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரிகளுடன் 36 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

  32 பந்துகளில் ஆறு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 44 ரன்களை குவித்த கே.எம். காந்தி அருன் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பின் களமிறங்கிய தினேஷ் கார்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த தினேஷ் கார்திக்  28 பந்துகளில் ஆறு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய தினேஷ் கார்திக் 47 ரன்களை குவித்தார்.

  18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்த டியூட்டி பேட்ரியாட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது தினேஷ் கார்த்திக் பெற்றார்.
  Next Story
  ×