search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kovai Kings"

    • பேட்டிங்கில் எங்களது ஷாட்கள் தவறாக இருந்தது.
    • கோவை அணி கேப்டன் ஷாருக்கான் பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்தி எங்களை கட்டுப்படுத்தினார்.

    கோவை:

    டி.என்.பி.எல். போட்டியில் நெல்லை அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. கோவையில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது.

    கேப்டன் அருண் கார்த்திக் 38 பந்தில் 47 ரன்னும் (பவுண்டரி, 2 சிக்சர்) சோனு யாதவ் 26 பந்தில் 43 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். கேப்டன் ஷாருக்கான், எம்.முகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் 18.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் 48 பந்தில் 76 ரன்னும் (8 பவுண்டரி, 3 சிக்சர்), சுரேஷ் குமார் 55 பந்தில் 63 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    வெற்றி குறித்து கோவை கிங்ஸ் கேப்டன் ஷாருக்கான் கூறியதாவது:-

    டி.என்.பி.எல். தொடரில் தொடர்ந்து 10-வது வெற்றியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் 2 போட்டியில் கடுமையாக போராடி வென்றோம். இனி வரும் போட்டிகளிலும் எங்களின் முழு திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். சொந்த ஊரான கோவையில் வெற்றி பெறுவது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் முதல் தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் அருண் கார்த்திக் கூறும்போது, 'மழை பெய்ததால் பந்து வீச்சாளர்கள் பந்து வீச மிகவும் சிரமப்பட்டனர்'. பேட்டிங்கில் எங்களது ஷாட்கள் தவறாக இருந்தது. கோவை அணி கேப்டன் ஷாருக்கான் பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்தி எங்களை கட்டுப்படுத்தினார். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடுவோம் என்றார்.

    இன்று நடைபெறும் 'லீக்' ஆட்டங்களில் சேலம் ஸ்பார்ட்ன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் (மாலை 3.15), சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிரா கன்ஸ் (இரவு 7.15) அணிகள் மோதுகின்றன.

    • 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    தமிழ்நாட்டில் நகரங்கள் மட்டுமின்றி கிராமத்து அளவிலும் திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து, அவர்களை உலகறியச் செய்வதற்கான வாய்ப்பினை வழங்கும் ஒரு அடித்தளமாக தமிழ்நாடு பிரிமீயர் லீக் என்படும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடங்கப்பட்டது.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். கிரிக்கெட் 2016-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இதுவரை 7 சீசன் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றி வெற்றிகரமான அணியாக விளங்குகிறது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகளும் பட்டம் வென்றுள்ளன. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கலக்கும் வீரர்களுக்கு ஐ.பி.எல்.-ல் ஆடும் அதிர்ஷ்டம் அடிப்பதால் இளம் வீரர்கள் எப்போதும் தங்களது முழு திறமையை வெளிக்காட்ட முயற்சிப்பார்கள். வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, ஆல்-ரவுண்டர் ஷாருக்கான் உள்ளிட்டோர் டி.என்.பி.எல்.-ல் அபாரமாக ஆடியதாலேயே ஐ.பி.எல். ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. சேலம், நெல்லை, கோவை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய 5 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். 2-வது தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டி மட்டும் சென்னை சேப்பாக்கத்தில் அரங்கேறும். இறுதிப்போட்டி ஆகஸ்டு 4-ம்தேதி நடக்கிறது.

    இந்த சீசனில் ஜெகதீசன், பாபா அபராஜித், பிரதோஷ் ரஞ்சன் பால் (3 பேரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்), ஷாருக்கான், சாய் சுதர்சன், எம்.சித்தார்த் (கோவை), வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின், அலெக்சாண்டர் (மதுரை), கடந்த ஆண்டில் ஒரு சதத்துடன் 385 ரன் குவித்து முதலிடம் பிடித்தவரான அஜிதேஷ், அருண் கார்த்திக் (நெல்லை), டெஸ்டில் 516 விக்கெட் வீழ்த்திய சாதனையாளரான சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், ஐ.பி.எல்.-ல் கொல்கத்தா அணிக்காக சுழலில் மிரட்டிய வருண் சக்ரவர்த்தி, பாபா இந்திரஜித், சந்தீப் வாரியர் (4 பேரும் திண்டுக்கல்), சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவசாலிகளான விஜய் சங்கர், டி.நடராஜன், சாய் கிஷோர் (3 பேரும் திருப்பூர்), ஹரிஷ்குமார் (சேலம்), ரூ,22 லட்சத்துக்கு ஏலம் போன ஆல்-ரவுண்டர் சஞ்சய் யாதவ், அதிசயராஜ் டேவிட்சன் (திருச்சி) உள்ளிட்ட நட்சத்திர வீரர்களின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஜிம்பாப்வே தொடரில் விளையாட சென்று இருப்பதால் அவர்கள் டி என் பி எல் -ல் தொடக்ககட்ட ஆட்டங்களில் விளையாட மாட்டார்கள்.

    நடப்பு டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதல்சுற்று ஆட்டங்கள் சேலத்தில் நடக்கிறது. சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்சும், முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சென்னை அணியில் கேப்டன் பாபா அபராஜித், ஜெகதீசன், ரஞ்சன் பால், பெரியசாமி, ரஹில் ஷா, ஷாஜகான், அபிஷேக் தன்வர், சிலம்பரசன் ஆகியோர் நன்றாக ஆடக்கூடியவர்கள். இதேபோல் கோவை அணிக்கு கேப்டன் ஷாருக்கான், முகிலேஷ், தாமரைக் கண்ணன், சித்தார்த், சுரேஷ்குமார், முகமது உள்ளிட்டோர் வலு சேர்க்கிறார்கள்.

    இரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6-ல் சேப்பாக் சூப்பர் கில்லீசும், 3-ல் கோவையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. ஏறக்குறைய சரிசம பலத்துடன் வெற்றியோடு தொடங்கும் உத்வேகத்துடன் மல்லுக்கட்டுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    சேப்பாக் கேப்டன் பாபா அபராஜித் நிருபர்களிடம் கூறுகையில், 'இந்த ஆண்டு சேப்பாக் அணிக்கு கேப்டனாக செயல்படவுள்ளது எனக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். அதுவும் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரு அணியை வழிநடத்துவது மிகப்பெரிய பொறுப்பாக உணர்கிறேன். எங்கள் அணியில் அனுபவமிக்க வீரர்களும், பல கவனிக்கத்தக்க இளம் வீரர்களும் நிறைந்துள்ளனர். இந்த சீசன் நன்றாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த முறை எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வெல்லும்' என்றார்.

    கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் அளித்த பேட்டியில், 'இந்த போட்டி தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கிறோம். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மட்டுமின்றி எல்லா அணிகளும் திறமையான அணிகள் தான். இந்த சீசன் முழுவதும் நன்றாக விளையாட வேண்டும். கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது போல் இந்த முறையும் வெல்வோம் என்று நம்பிக்கை இருக்கிறது' என்று தெரிவித்தார்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ,1.7 கோடியாகும். இதில் மகுடம் சூடும் அணிக்கு ரூ,50 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படுகிறது.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: பாபா அபராஜித் (கேப்டன்), ஆந்த்ரே சித்தார்த், வி.அருணாசலம், அஸ்வின் கிறிஸ்ட், டேரில் பெராரியோ, அய்யப்பன், என்.ஜெகதீசன், ஜிதேந்திர குமார், மதன்குமார், ஜி.பெரியசாமி, பிரேம்குமார், பிரதோஷ் ரஞ்சன் பால், சந்தோஷ்குமார், ஆர்.சதீஷ், ரஹில் ஷா, ஷாஜகான், சிபி, எம்.சிலம்பரசன், பி.சூர்யா, அபிஷேக் தன்வர்.

    கோவை கிங்ஸ்: ஷாருக்கான் (கேப்டன்), சுரேஷ்குமார், சுஜய், அதீக் ரகுமான், திவாகர், கவுதம் தாமரைக் கண்ணன், ஹேம் சரண், மீரான் ரஹில் ரகுமான், முகிலேஷ், ஓம் பிரகாஷ், ராம் அரவிந்த், சாய் சுதர்சன், எம்.சித்தார்த், ஜதாவேத் சுப்பிரமணியன், வித்யூத், ஜி.வி.விக்னேஷ், யுதீஸ்வரன், மணிஷ், சச்சின்.

    இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறினர்.
    • கோவை கிங்ஸ் தரப்பில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கோவை பந்துவீச்சாளர்கள் கடும் சவாலாக பந்து வீசினர். முன்னணி பேட்ஸ்மேன்கள்கூட நிலைக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 32 ரன்கள் அடித்தார். சசிதேவ் 23 ரன்கள் அடித்தார். கோவை கிங்ஸ் தரப்பில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கோவை கிங்ஸ் அணி களமிறங்குகிறது. 

    • டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இந்த சீசனில் இதுவரை மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சையும், 2-வது போட்டியில் திருப்பூர் தமிழன்சையும் வீழ்த்தியிருக்கிறது.

    இதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் கோவை கிங்சை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இருக்கிறது. கோவை கிங்ஸ் 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றது.
    • கோவை கிங்ஸ் 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 70 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வென்றது.

    திண்டுக்கல்:

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. 16-ந் தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தன. 6 ஆட்டங்கள் கோவையில் நடத்தப்பட்டது.

    ஒருநாள் ஓய்வுக்கு பிறகு திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நேற்று தொடங்கியது.

    2 ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. முதல் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பால்சி திருச்சியை வீழ்த்தியது. சேலம் அணி முதல் வெற்றியை பெற்றது. திருச்சி அணி 2-வது தோல்வியை தழுவியது.

    2-வது போட்டியில் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது. திண்டுக்கல் அணிக்கு 2-வது வெற்றி கிடைத்தது. மதுரை அணி 2-வது தோல்வியை தழுவியது.

    டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றது.

    முதல் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சையும் (52 ரன்), 2-வது போட்டியில் திருப்பூர் தமிழன்சையும் (7 விக்கெட்) வீழ்த்தி இருந்தது. இன்றைய ஆட்டத்தில் கோவை கிங்சை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இருக்கிறது.

    கோவை கிங்ஸ் 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 70 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வென்றது. 2-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்சிடம் 4 விக்கெட்டில் தோற்றது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் குவாலிபையர் 2-ல் மதுரை பாந்தர்ஸ்க்கு கோவை கிங்ஸ் 126 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. #ENGvIND
    தமிழ்ந்நாடு பிரீமியர் லீக் தொடரின் 2-வது குவாலிபையர் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. மதுரை பாந்தர்ஸ்க்கு எதிராக டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க வீரர் ஷாருக்கான் 4 ரன்னிலும், அபிநவ் முகுந்த் 28 ரன்னிலும், அதன்பின் வந்த ரவி குமார் ரோஹித் 5 ரன்னிலும் வெளியேறினார்கள்.



    அதன்பின் வந்த அஸ்வின் வெங்கடராமன் 45 ரன்களும், பிரசாந்த் ராஜேஷ் 29 ரன்களும் அடிக்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்தது. மதுரை பாந்தர்ஸ் அணியின் அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    இறுதிப் போட்டிக்குள் நுழையும் 2-வது அணி யார் என்பதை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியும் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றனர். #TNPL2018 #NammaOoruNammaGethu
    நத்தம்:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் 20 ஓவர் போட்டிதொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நேற்று மாலை நடந்த முதல் தகுதி சுற்று (குவாலிபையர் 1) ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 75 ரன் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    இதே மைதானத்தில் இரவு நடந்த வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) போட்டியில் கோவை கிங்ஸ் வெற்றி பெற்றது. அந்த அணி காரைக்குடி காளையை 24 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து வெளியேற்றியது.

    இறுதிப் போட்டிக்குள் நுழையும் 2-வது அணி யார் என்பதை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர்-2) இன்று நத்தத்தில் நடக்கிறது. இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த மதுரை பாந்தர்ஸ் அணியும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற கோவை கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மதுரை லீக் ஆட்டத்தில் 7 போட்டியில் 5 வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்தது. முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் நிர்ணயித்த 203 ரன் இலக்கை நோக்கி விளையாடிய மதுரை 128 ரன்னில் சுருண்டது.

    இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று முழு திறமையை வெளிபடுத்துவது அவசியம். அந்த அணியில் அருண் கார்த்திக், தலைவன் சற்குணம், ரோகித், காவுசிக், தன்வார், வருண் சக்ரவர்த்தி, ரகில்ஷா போன்ற வீரர்கள் உள்ளனர். மேலும் பந்து வீச்சில் முன்னேற்றம் காண்பது அவசியம். அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணியில் ஷாருக்கான், ரோனித், அந்தோணிதாஸ், அகில்ஸ்ரீநாத் அஜித்ராம், அஸ்வின் வெங்கடராமன் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    வெளியேறுதல் சுற்றில் காரைக்குடியை வீழ்த்தி உள்ளதால் கோவை கிங்ஸ் நம்பிக்கையுடன் உள்ளது. அதே உத்வேகத்துடன் விளையாட முயற்சிக்கும்.

    இறுதிப் போட்டிக்கு நுழைய இரு அணிகளும் மல்லு கட்டும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எலிமினேட்டர் சுற்றில் காரைக்கு காளைக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கோவை கிங்ஸ். #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எலிமினேட்டர் சுற்று திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. கோவை கிங்ஸ் அணிக்கெதிராக காரைக்குடி காளை டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி கோவை கிங்ஸ் அணியின் ஷாருக்கான், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஷாருக்கான 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அபிநவ் முகுந்த் 51 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.



    அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேற கோவை கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. காரைக்குடி காளை அணியின் ராஜ்குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் கோவை கிங்ஸ் மதுரை பாந்தர்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது. #TNPL2018
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று (சனிக்கிழமை) இரவு நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 26-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணி 6 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் 10 புள்ளிகள் குவித்து அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்டது. அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டம் கோவை கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற முடியும். கடந்த லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 14 ரன் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியில் இருந்து மீண்டு வர கோவை அணி முயற்சிக்கும். மதுரை பாந்தர்ஸ் அணி கடைசி லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் அந்த அணி வீரர் அருண் கார்த்திக் 85 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    முந்தைய வெற்றி உத்வேகத்தை தொடருவதுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க மதுரை பாந்தர்ஸ் அணி முனைப்பு காட்டும். வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் ஏற்கனவே 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் ஒரு ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #TNPL2018

    தொடர்ந்து 4-வது தோல்வியை அடைந்து இருப்பது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் நாங்கள் இன்னும் ஒரு குழுவாக செயல்படவில்லை எனவும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் முருகன் அஸ்வின் கூறியுள்ளார். #TNPL2018 #CSG
    நெல்லை:

    3-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட் 20 ஓவர் போட்டியில் நேற்று நெல்லையில் நடந்த 16-வது ‘லீக்’ ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த கோவை 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்தது. ஷாருக்கான் 59 ரன்னும், அபினவ் முகுந்த் 34 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 18 ஓவரில் 105 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் கோவை கிங்ஸ் 53 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கோவை அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடர்ந்து 4-வது தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது.

    தோல்வி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் முருகன் அஸ்வின் கூறியதாவது:-

    தொடர்ந்து 4-வது தோல்வியை அடைந்து இருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. தனிப்பட்ட அணியில் ஒவ்வொரு வீரரும் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் நன்றாக செயல்பட்டு இருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்னும் ஒரு குழுவாக செயல்படவில்லை. இது தான் தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறேன்.

    முதல் இன்னிங்சில் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். ஒரு ஒவருக்கு 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தோம். 4 விக்கெட் கைப்பற்றினோம். ஆனால் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. முதல் 10 ஓவர்களில் கொஞ்சம் ரன்கள் குவித்திருக்க வேண்டும் அதனை நாங்கள் சரியாக செய்யவில்லை. இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நிறைய சாதகமாக இருக்கிறது. அதனால் தான் சுழற்பந்து வீச்சாளர்கள் நிறைய ஆதிக்கம் செலுத்தினர்.

    அதே நேரத்தில், வேகப்பந்து வீச்சாளர்களும் சரியான இடத்தில், வித்தியாசமான முயற்சி எடுக்கும்போது அவர்களாலும் விக்கெட்டுகள் வீழ்த்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPL2018 #CSG
    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நெல்லையில் இன்று இரவு நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கோவை கிங்சை எதிர்கொள்கிறது. #TNPL2018 #ChepaukSuperGillies #KovaiKings
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் நெல்லை சங்கர் நகரில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கோவை கிங்ஸ் அணியை சந்திக்கிறது.

    கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை ஆடிய 3 லீக் ஆட்டங்களிலும் (திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ், காரைக்குடி காளைக்கு எதிராக) தோல்வியையே சந்தித்துள்ளது. அதே சமயம் அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி முதல் லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணியை வென்றது. அடுத்த 2 ஆட்டங்களில் திண்டுக்கல் டிராகன்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகளிடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 8 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி கோவை அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது.



    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை பொறுத்தவரை எஞ்சிய 4 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். எனவே இன்றைய ஆட்டம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு வாழ்வா?-சாவா? போட்டியாகும். அதனால் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த முயற்சிக்கும்.

    நெல்லை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. எனவே முந்தைய ஆட்டத்தில் நன்றாக செயல்பட்ட மணிகண்டன், அஜித்ராம், ராஜேஷ் ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் கோவை கிங்ஸ் அணி களம் இறங்கும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அலெக்சாண்டர், எம்.அஸ்வின் ஆகிய சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனவே இந்த ஆட்டத்தில் சுழலுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கலாம். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பீல்டிங் மற்றும் பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

    இந்திய ‘ஏ’ அணிக்கு தேர்வாகியிருந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் முதல் 3 ஆட்டங்களில் ஆடவில்லை. தற்போது தாயகம் திரும்பி விட்டாலும் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்திலும் அவர் விளையாட வாய்ப்பில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 முறையும், கோவை கிங்ஸ் அணி ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளன. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #TNPL2018 #ChepaukSuperGillies #KovaiKings
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் கோவை கிங்ஸ்க்கு 125 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது திருச்சி வாரியர்ஸ். #TNPL2018 #TWvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பரத் ஷங்கர் 24 ரன்களும், பாபா இந்திரஜித் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    அடுத்து வந்த மணி பாரதி 10 ரன்னிலும், எஸ் அரவிந்த் டக்அவுட்டிலும் பெவிலியன் திரும்பினார்கள். சுரேஷ் குமார் 33 பந்தில் 35 ரன்களும், சோனு யாதவ் 20 பந்தில் 21 ரன்களும் அடிக்க திருச்சி வாரியர்ஸ் சரியாக 20 ஓவரில் 124 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    ×