என் மலர்

  நீங்கள் தேடியது "murugan ashwin"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொடர்ந்து 4-வது தோல்வியை அடைந்து இருப்பது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் நாங்கள் இன்னும் ஒரு குழுவாக செயல்படவில்லை எனவும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் முருகன் அஸ்வின் கூறியுள்ளார். #TNPL2018 #CSG
  நெல்லை:

  3-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட் 20 ஓவர் போட்டியில் நேற்று நெல்லையில் நடந்த 16-வது ‘லீக்’ ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதின.

  முதலில் பேட்டிங் செய்த கோவை 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்தது. ஷாருக்கான் 59 ரன்னும், அபினவ் முகுந்த் 34 ரன்னும் எடுத்தனர்.

  பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 18 ஓவரில் 105 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் கோவை கிங்ஸ் 53 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  கோவை அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடர்ந்து 4-வது தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது.

  தோல்வி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் முருகன் அஸ்வின் கூறியதாவது:-

  தொடர்ந்து 4-வது தோல்வியை அடைந்து இருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. தனிப்பட்ட அணியில் ஒவ்வொரு வீரரும் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் நன்றாக செயல்பட்டு இருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்னும் ஒரு குழுவாக செயல்படவில்லை. இது தான் தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறேன்.

  முதல் இன்னிங்சில் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். ஒரு ஒவருக்கு 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தோம். 4 விக்கெட் கைப்பற்றினோம். ஆனால் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. முதல் 10 ஓவர்களில் கொஞ்சம் ரன்கள் குவித்திருக்க வேண்டும் அதனை நாங்கள் சரியாக செய்யவில்லை. இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நிறைய சாதகமாக இருக்கிறது. அதனால் தான் சுழற்பந்து வீச்சாளர்கள் நிறைய ஆதிக்கம் செலுத்தினர்.

  அதே நேரத்தில், வேகப்பந்து வீச்சாளர்களும் சரியான இடத்தில், வித்தியாசமான முயற்சி எடுக்கும்போது அவர்களாலும் விக்கெட்டுகள் வீழ்த்த முடியும்.

  இவ்வாறு அவர் கூறினார். #TNPL2018 #CSG
  ×