என் மலர்

  செய்திகள்

  விராட் கோலியின் ‘ஈகோ’ வெற்றி பெற்றது: கும்ப்ளே விலகல் குறித்து மதன் லால் கருத்து
  X

  விராட் கோலியின் ‘ஈகோ’ வெற்றி பெற்றது: கும்ப்ளே விலகல் குறித்து மதன் லால் கருத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை அனில் கும்ப்ளே ராஜினாமா செய்ததன் மூலம் கோலியின் ஈகோ வெற்றி பெற்றது என மதன் லால் கூறியுள்ளார்.
  இந்திய அணி கேப்டன் விராட் கோலி - தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஆகியோருக்கு இடையிலான கருத்து வேறுபாட்டின் காரணமாக, கும்ப்ளே தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

  கும்ப்ளே பதவி விலகியது குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் மதன் லால் விராட் கோலியின் ஈகோ வெற்றி பெற்றுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து மதன் லால் கூறுகையில் ‘‘இந்திய கிரிக்கெட் அணியில் இதுபோன்ற ஈகோ பிரச்சினை டிரெண்டாக இருக்கிறது. இந்திய அணியில் உள்ள வீரர்கள் தங்களை சுற்றி எப்போதும் ‘ஆமாம் சாமி’ என்று கூறுபவர்கள்தான் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களுக்கு பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பொறுத்தமானவர். அப்படி இருப்பதால் இந்திய வீரர்கள் சந்தோசமாக இருப்பார்கள்.

  யாராக இருந்தாலும் இந்திய வீரர்களை எதிர்த்து கேள்விகள் கேட்டால் அவர்கள் வெளியே சென்று விட வேண்டியதுதான். அது எப்போதும் இந்திய அணியில் இருந்த டிரெண்ட். நான் 1996 முதல் 1997 வரை பயிற்சியாளராக இருந்தபோதும் இது நடந்தது. நான் 45 சதவீதம் வெற்றி சராசரி வைத்திருந்தேன். இருந்தாலும் நான் வெளியேற்றப்பட்டடேன். அதற்கு காரணம் அணி வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இருந்ததுதான். வீரர்களை நிர்வகிக்கும் பெரிய நபர் கிடையாது என்பதால்தான். ஈகோவை நிர்வகிக்கத் தெரிந்த இந்திய அணி பயிற்சியாளர்களால் மட்டுவே முடிவை எதிர்பார்க்க முடியும்.

  ஜான் ரைட், கேரி கிர்ஸ்டன் மற்றும் டங்கன் பிளெட்சர் போன்ற வெளிநாட்டு பயிற்சியாளர்கள் வெற்றிகரமாக நீண்ட நாட்கள் தங்களது பயிற்சியாளர் பதவியை பூர்த்தி செய்திருப்பார்கள். அவர்கள் எந்தவொரு கேள்வியையும் கேட்கமாட்டார்கள். அதேபோல் மூத்த வீரர்களுக்கு எதிராக சவால் விடும் தோணியில் இருக்க மாட்டார்கள். அதற்கு மாறாக கேள்வி கேட்ட ஒரு வெளிநாட்டு பயிற்சியாளர் என்ன ஆனார் என்பது நமக்குத் தெரியும்.  அனுபவ வீரர்களை நீங்கள் பயிற்சிக்கு உட்படுத்தும்போது, பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும். அது மிகவும் எளிதான காரியம் அல்ல.

  அனில் கும்ப்ளே - விராட் கோலி இடையிலான மோதல் எப்போதும் உள்ளது போன்ற டிரெண்ட்தான். வீரர்கள் முதலாளிகள் போல் செயல்படுவார்கள். கடந்த பல வருடங்களாக இந்த சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தற்போதும் நிகழ்ந்துள்ளது. கேப்டன் எதை வேண்டுமென்றாலும் முடிவு செய்யலாம். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்று இந்திய கிரிக்கெட்டில் கிடையாது. அங்கோ சூப்பர் ஸ்டார் என்ற கலாச்சாரம் கிடையாது. இந்திய அணியில் கேப்டன் உடன் முறைத்துக் கொண்டார். அத்துடன் உங்களுடைய கேரியம் முடிவுக்கு வந்து விடும். விராட் கோலிக்கும், கும்ப்ளேவிற்கும் இடையில் என்ன நடந்தது என்று தெரியாது. சிறந்த முறையில் நடத்தப்படுவதற்கு கும்ப்ளே தகுதியானவர்’’ என்றார்.
  Next Story
  ×