என் மலர்

    செய்திகள்

    குயின்ஸ் கிளப் டென்னிஸ்: முதல் சுற்றில் டிமித்ரோவ் வெற்றி
    X

    குயின்ஸ் கிளப் டென்னிஸ்: முதல் சுற்றில் டிமித்ரோவ் வெற்றி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    லண்டனில் நடந்து வரும் குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியின் நேற்றைய ஆட்டம் ஒன்றில் பல்கேரியா வீரர் டிமித்ரோவ் அமெரிக்க வீரர் ரையான் ஹாரிசனை நேர்செட்டில் வீழ்த்தினார்.
    லண்டன் :

    குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் செக் குடியரசு வீரர் தாமஸ் பெர்டிச் 7-5, 6-3 என்ற நேர்செட்டில் பெல்ஜியம் வீரர் ஸ்டீவ் டார்சிலை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் பல்கேரியா வீரர் டிமித்ரோவ் 6-3, 6-1 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீரர் ரையான் ஹாரிசனை வீழ்த்தினார்.

    இன்னொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் சோங்கா 6-2, 6-2 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் அட்ரியன் மன்னரிலோவை சாய்த்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசாகா 6-1, 2-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை லாரென் டேவிஸ்சை வீழ்த்தினார்.
    Next Story
    ×