என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புதிய ஆணையம் விரைவில் கூடி இந்த ஆறு உறுப்பினர்களில் ஆணையத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை முடிவு செய்யும்.
    புதுடெல்லி: 

    ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் (பி.டபுள்யு.எப்.) தடகள ஆணைய உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் உலக சாம்பியனான சிந்து, 2025 வரை உறுப்பினர் பதவியில் நீடிப்பார். 

    சிந்து தவிர, அமெரிக்காவின் ஐரிஸ் வாங், நெதர்லாந்தின் ராபின் டாபலிங், இந்தோனேசியாவின் கிரேசியா போலி, கொரியாவின் கிம் சோயியாங், சீனாவின் செங் சி வெய் ஆகியோரும் தடகள ஆணைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

    புதிய ஆணையம் விரைவில் கூடி இந்த ஆறு உறுப்பினர்களில் ஆணையத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை முடிவு செய்யும். உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் தடகள ஆணைய தலைவர், 2025 இல் அடுத்த தேர்தல்கள் வரை கவுன்சிலின் உறுப்பினராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அடுத்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி தொடங்கவுள்ள ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் தான் பங்கேற்பது சந்தேகம் என ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.
    மாட்ரிட்:

    பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அவர் காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த ஆண்டு பல தொடர்களில் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் காயத்தில் இருந்து குணமடைந்து கடந்த மாதம் அபுதாபியில் நடைபெற்ற உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றார். அந்த தொடரில் அரை இறுதி போட்டி வரை முன்னேறிய அவர், ஆன்டி முர்ரேவிடம் தோல்வியடைந்தார். இதை தொடர்ந்து அவர் ஸ்பெயின் திரும்பிய நிலையில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து ரபேல் நடால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது:-

    இன்று ஸ்பெயினில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அபுதாபியில் நான் தோல்வி அடைந்தாலும் நீண்ட நாட்களுக்கு பின் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. என் வாழ்வில் ஏற்பட்ட பல சறுக்கல்களில் இருந்து இப்போது தான் சிறிது சிறிதாக முன்னேறி வருகிறேன். அடுத்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி தொடங்கவுள்ள ஆஸ்திரேலியா ஓபன் போட்டிகளில் பங்கேற்பது குறித்து இப்போதைக்கு உறுதியாக கூற முடியாது.

    இவ்வாறு ரபேல் நடால் கூறினார்.
    468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    அடிலெய்டு

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா  அணி இங்கிலாந்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

    இதை தொடர்ந்து கடந்த டிசம்பர் 16-ம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் தொடங்கிய 2-வது போட்டியில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி,  முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதை தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 230 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-0 என்ற  கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.

    விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, சவுராஷ்டிரா, இமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா, விதர்பா, கேரளா, சர்வீசஸ் ஆகிய 8 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.
    ஜெய்ப்பூர்:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிக்கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் கால் இறுதிக்கு முந்தைய சுற்று முடிந்தது.

    இதன்படி தமிழ்நாடு, சவுராஷ்டிரா, இமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா, விதர்பா, கேரளா, சர்வீசஸ் ஆகிய 8 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

    கால் இறுதி ஆட்டங்கள் நாளை நடக்கிறது. தமிழக அணி கால் இறுதி ஆட்டத்தில் கர்நாடகாவை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்று தமிழக அணி அரை இறுதிக்கு முன்னேறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக அணி லீக் ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றது. 2-ல் தோற்றது. தமிழக அணி ஏற்கனவே லீக் ஆட்டத்தில் கர்நாடகாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    இதனால் நம்பிக்கையுடன் விளையாடி அந்த அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

    நாளை நடைபெறும் மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் இமாச்சல பிரதேசம்- உத்தர பிரதேசம் அணிகள் மோதுகின்றன. 22-ந் தேதி நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் சவுராஷ்டிரா- விதர்பா, கேரளா- சர்வீசஸ் அணிகள் மோதுகின்றன.

    24-ந் தேதி அரை இறுதி ஆட்டங்களும், இறுதிப் போட்டி 26-ந் தேதியும் நடைபெறுகிறது.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செஞ்சூரியன்:

    இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்று உள்ளது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.

    இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் விகாரிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடியதால் அவர் நிச்சயம் இடம் பெறலாம் என்று தெரிகிறது.

    அதேநேரத்தில் ஸ்ரேயாஸ் அய்யரும் நியூசிலாந்து தொடரில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்த இருவரில் ஒருவரோ, அல்லது 2 பேருமோ இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் இந்திய அணியின் பலமே வேகப்பந்து வீச்சுதான் என்று புஜாரா தெரிவித்து உள்ளார். சீனியர் வீரரான அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் எங்கள் பலம். வெளிநாட்டு மண்ணில் அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.

    தென் ஆப்பிரிக்காவில் நிலவும் சூழலுக்கு ஏற்ற வகையில் தங்களை வடிவமைத்து கொண்டு இந்திய பந்து வீச்சாளர்கள் ஒவ்வொரு டெஸ்டிலும் 20 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான திறமை அவர்களிடம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ‌ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ‌ஷர்துல் தாகூர் ஆகிய 6 வேகப்பந்து வீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்க தொடரில் இடம் பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் அணி 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் மொத்தம் 8 டெஸ்ட் , 11 ஒருநாள் மற்றும் 13 டி20 போட்டிகளில் மோதவுள்ளது.
    லாகூர்

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இரண்டு முறை பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    கடந்த செப்டம்பர் மாதம் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மோத இருந்தது. பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பே சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியது. இந்நிலையில் நியூசிலாந்து அணி, ரத்து செய்த போட்டிகளையும் சேர்ந்து அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம், 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் என இரண்டு முறை பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

    ரமீஸ் ராஜா

    இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா கூறியதாவது:-

    நியூசிலாந்து கிரிக்கெட் போர்டுடன் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி சார்பாக 2 டெஸ்ட் போட்டிகளிலும், ஐசிசி ஆண்கள் உலகக்கோப்பை சூப்பர் லீக் தொடருக்காக 3 ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்துக்கு எதிராக அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தான் மோதவுள்ளது. அதே போல இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட போட்டிகளுக்கு பதில், 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஒருநாள் போட்டிகளிலும், 5 டி20 போட்டிகளிலும் பாகிஸ்தான் மோதவுள்ளது. இந்த இரு சுற்றுப்பயணங்களும் நியூசிலாந்து-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான புரிதலையும், நட்பையும் அதிகரிக்கும்.

    இவ்வாறு ரமீஸ் ராஜா கூறினார். 

    இதன்மூலம் பாகிஸ்தான் அணி 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் மொத்தம் 8 டெஸ்ட் , 11 ஒருநாள் மற்றும் 13 டி20 போட்டிகளில் மோதவுள்ளது.
    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் முதல் அரையிறுதியில் இந்திய அணி ஜப்பான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
    டாக்கா:

    வங்கதேசம் தலைநகர் டாக்காவில் ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரின் முதல் போட்டியில் தென் கொரியா அணியை எதிர்கொண்ட இந்திய அணி 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் வங்கதேசத்துடன் மோதிய இந்திய அணி 9-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, ஜப்பானுடன் மோதியது. போட்டி தொடங்கியது முதல் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் முதல் பாதி முடிவில் இந்தியா 2-0 என முன்னில வகித்தது. 

    இரண்டாவது பாதியிலும் இந்தியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இறுதியில், இந்தியா 6-0 என்ற கணக்கில் ஜப்பானை பந்தாடி அபார வெற்றி பெற்றது. இத்தொடரில் இந்தியா பெறும் 3வது வெற்றி இதுவாகும்.

    இந்தியா 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு டிரா என 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. பகல்- இரவு போட்டியான இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 473 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. லாபஸ்சேன் சதமடித்து 103 ரன்னிலும், வார்னர் 95 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் 93 ரன்னிலும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 51 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும், ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 236 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டேவிட் மலான் 80 ரன்னிலும், ஜோ ரூட் 62 ரன்னிலும் அவுட்டாகினர். பென் ஸ்டோக்ஸ் 34 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 24 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும், லயான் 3 விக்கெட்டும், கிரீன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து, 237 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. லாபஸ்சேன் 51 ரன்னும், டிராவிஸ் ஹெட் 51 ரன்னும், கேமரூன் கிரீன் 33 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

    இங்கிலாந்து சார்பில் ஆலி ராபின்சன், ஜோ ரூட், மலான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 34, ஹமீத் ரன் எடுக்காமலும், டேவிட் மலான் 20 ரன்னுடனும், ஜோ ரூட் 24 ரன்னிலும் அவுட்டாகினர். 82 ரன்கள் எடுப்பதற்குள் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

    இறுதி நாளான இன்று மீதமுள்ள 6 விக்கெட்டுகளை கைப்பற்றினால் ஆஸ்திரேலியா இரண்டாவது வெற்றியை பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக சிங்கப்பூர் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
    வெல்வா:

    26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் நடைபெற்றது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூ ஆகியோர் மோதினர்.  

    இதில் சிங்கப்பூர் வீரர் லோ கியான் 21-15, 22-20 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்ந்தை வீழ்த்தி பட்டம் வென்றார்.

    இறுதிப்போட்டியில் தோற்றதால் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ஸ்ரீகாந்த் கிதம்பி பெற்றுள்ளார்.

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் பிரிவில் தாய்லாந்தின் டெகாபோல்-சப்சிறீ ஜோடி தங்கம் வென்றது.
    மாட்ரிட்:

    உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடந்த மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி மற்றும் சீன தைபே வீராங்கனை தாய் ஜூ யிங் ஆகியோர் விளையாடினர். 

    போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய அகானே, உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான யிங்கை 39 நிமிடங்களில் வீழ்த்தினார்.

    முதல் செட்டை 14-21 என்ற புள்ளி கணக்கில் எளிதில் கைப்பற்றிய அகானே, தொடர்ந்து 2வது செட்டையும் கடும் சவால் எதுவும் இல்லாமல் 11-21 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றி, சாம்பியன் பட்டத்தை வென்றார். 

    கலப்பு இரட்டையர் பிரிவில் தாய்லாந்தின் டெகாபோல்-சப்சிறீ ஜோடி தங்கம் வென்றது. இறுதிப்போட்டியில் இந்த ஜோடி, 21-13, 21-14 என்ற செட் கணக்கில் ஜப்பான் நாட்டின் யுதா வதனாபே/அரிசா ஜோடியை வீழ்த்தியது. இந்த ஆண்டில் தாய்லாந்து ஜோடி பெற்ற ஐந்தாவது தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
    டெல்லி வீரர் யாஷ் துல் தலைமையிலான ஜூனியர் உலகக் கோப்பை அணியில் தமிழக வீரர் மானவ் பராக் இடம்பிடித்துள்ளார்.
    புதுடெல்லி:

    19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் வரும் ஜனவரி மாதம் 14ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி வீரர் யாஷ் துல் தலைமையிலான அணியில் தமிழக வீரர் மானவ் பராக் இடம்பிடித்துள்ளார். 

    இந்திய அணி வீரர்கள்: யாஷ் துல் (கேப்டன்), ஹர்னூர் சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, எஸ்.கே.ரஷீத் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, சித்தார்த் யாதவ், அனீஸ்வர் கவுதம், தினேஷ் பனா, ஆராத்யா யாதவ், ராஜ் அங்கத் பாவா, மானவ் பராக், கவுஷால் தம்பே, ஆர்.எஸ்.ஹங்கர்கேகர், வாசு வாட்ஸ், விக்கி ஓஸ்ட்வால், ரவிக்குமார், கர்வ் சங்வான்.

    காத்திருப்பு வீரர்கள்: ரிஷித் ரெட்டி, உதய் சஹாரன், அன்ஷ் கோசாய், அம்ரித் ராஜ் உபாத்யாய், பி.எம்.சிங் ரத்தோர்.
    ஒரு வருடத்திற்கு முன் பாகிஸ்தானியர்கள், நம்மிடம் விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல். ராகுல் போன்ற வீரர்கள் இல்லையே என கூறிக்கொண்டிருந்தனர் என ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்

    விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் நம்மிடம் இல்லை என பாகிஸ்தானியர்கள் கூறிய காலம் மாறி, இனி இந்தியர்கள் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் போன்ற வீரர்கள் இல்லை என கூறும் நாள் விரைவில் வரப்போகிறது என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் லத்திப் தெரிவித்துள்ளார்.

    உலகக்கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி அரையிறுதி வரை சென்றது. அந்த அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் அதன் தொடக்க வீரர்களான கேப்டன் பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும்தான். பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சமீபத்தில் நடைபெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை அதிரடியாக வென்றது. அந்த தொடரின் ஒரு போட்டியில் பாக்., அணியின் தொடக்க வீரர்களான பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தனர்.  

    அதேபோல இந்த ஆண்டு தொடக்கத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டியில் இரு வீரர்களும் இணைந்து 197 ரன்கள் எடுத்தனர். பாபர் அசாம் - ரிஸ்வான் ஜோடி 2021-ம் ஆண்டில் மட்டும் நான்கு முறை 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பில் எடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் கூறியதாவது:-

    முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஷித் லத்திப்
    ஒரு வருடத்திற்கு முன் பாகிஸ்தானியர்கள் நம்மிடம் விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல். ராகுல் போன்ற வீரர்கள் இல்லையே என கூறிக்கொண்டிருந்தோம்.

    ஆனால் இப்போதைய நிலைமையை பார்க்கும்போது இந்தியர்கள் முகமது ரிஜ்வான், பாபர் அசாம் போன்ற வீரர்கள் இல்லையே என கூறும் நாள் விரைவில் வரப்போகிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    இவ்வாறு ரஷித் லத்தீப் கூறினார்.
    ×