என் மலர்
விளையாட்டு
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அணி முழுவதையும் கலைத்து மெகா ஏலம் நடத்துவது அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அணி உரிமையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
புது டெல்லி:
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிட்டிருப்பதாக பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். மொத்தம் 10 அணிகள் பங்குபெறும் இந்த ஏலத்தை பெங்களூருவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வழக்கமாக பங்கேற்கும் எட்டு அணிகளுடன், இரண்டு புதிய அணிகள் இடம்பெறுகின்றன. இதற்காக ஏற்கனவே உள்ள அணிகள், அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்துள்ளன. இரண்டு புதிய அணிகளும் ஏலத்திற்கு முன்பாகவே 3 வீரர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இருப்பினும் மெகா ஏலம் குறித்து பெரும்பாலான அணி உரிமையாளர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ஒரு அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு ஒன்றாக இணைந்து விளையாடவே சில ஆண்டுகள் ஆகும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அணி முழுவதையும் கலைத்து மெகா ஏலம் நடத்துவது அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் பட்டியல் இரண்டிலும் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 2-ம் இடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 4-வது இடத்தையும், இந்திய அணியின் மற்றொரு வீரரான ரோகித் சர்மா 5-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் பேட் கம்மின்ஸ் முதல் இடத்திலும், தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் ஷாஹின் அப்ரிடி 3-வது இடத்திலும் உள்ளனர்.
டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டர் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்கள் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளனர்.
ஐசிசி வெளியிட்டுள்ள டி20 பேட்டிங் தரவரிசைப்பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், இங்கிலாந்து அணியின் டாவிட் மலன் ஒரே புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணியின் முகமது ரஸ்வான் 3-வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் கே.எல்.ராகுல் மட்டும் 5-வது இடத்தை பெற்றுள்ளார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இருப்பினும் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி பாகிஸ்தானின் வெற்றி கனவை தட்டிப்பறித்தனர்.
டாக்கா:
6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில்
5-3 என்னும் கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் 3-வது இடத்துக்கான போட்டி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இருப்பினும் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி பாகிஸ்தானின் வெற்றி கனவை தட்டிப்பறித்தனர். இதன்மூலம் இந்திய அணி 4-3 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கல பதக்கத்துடன் 3-வது இடத்தை கைப்பற்றியது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் தெண்டுல்கர் மகள் சாரா தெண்டுல்கரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர். இவருக்கு சாரா தெண்டுல்கர், அர்ஜுன் தெண்டுல்கர் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் அர்ஜூன் கிரிக்கெட் துறையில் நுழைந்துவிட்ட நிலையில் தெண்டுல்கரின் மூத்த மகளான சாரா லண்டனில் மருத்துவம் படித்துள்ளார்.
விளையாட்டு துறையின் பக்கம் வராத சாரா, சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடக்கூடியவர். இன்ஸ்டாகிராமில் சாரா தெண்டுல்கரை சுமார் 1 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
இதனால் சாரா மாடலிங் துறையில் நுழைவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சாராவிடமிருந்து எந்த வித தகவலும் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில்தான் சாரா, தான் ஒரு விளம்பரத்தில் மாடலாக நடித்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். சாராவுடன் நடிகைகள் பனிதா சந்து, தனியா ஷெராஃப் ஆகியோரும் அந்த விளம்பரத்தில் நடித்துள்ளனர்.
சாரா இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படம் மற்றும் வீடியோவால் ரசிகர்கள் பைத்தியமாகி விடுவார்கள்.

இதேதான் நேற்றும் நடந்தது. அவர் கையில் ஒரு ரோஜா பூவூடன் சிரித்த முகத்தோடு ஒரு நாற்காலியில் உட்கார்ந்து இருந்த புகைப்படத்தை சாரா (கேப்சனில் ஹலோ கோவா) பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் சிறிது நேரத்தில் இணைய தளத்தில் வைரலானது.
சச்சின் மகன் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதிக்க முடியாத நிலையில் சாரா தனது மாடலிங் துறையில் சாதிப்பாரா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி.- கேரளா அணிகள் மோதுகின்றன.
கோவா:
8-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை, சென்னை, மோகன்பகான் உள்பட 11 அணிகள் பங்கேற்றுள்ளன.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான (2015, 2018)சென்னையின் எப்.சி.- கேரளா அணிகள் மோதுகின்றன. சென்னை அணி இதுவரை விளையாடிய 6 போட்டியில் 3 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என 11 புள்ளிகள் பெற்றுள்ளது.
கடந்த ஆட்டத்தில் அந்த அணி ஒடிசாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. சென்னை அணியின் வெற்றி இன்றும் தொடருமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
கேரளா அணி இதுவரை விளையாடிய 6 போட்டியில் 2 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி என 9 புள்ளிகளுடன் உள்ளது. கடந்த ஆட்டத்தில் அந்த அணி மும்பை அணியை வீழ்த்தி உள்ளது.
புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய தொடக்க நாளில் 3 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ்- மும்பை அணிகள் மோதுகின்றன.
பெங்களூர்:
புரோ கபடி ‘லீக்’ போட்டி 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 7 போட்டித்தொடர் நடை பெற்று உள்ளது.
கடைசியாக 2019-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு போட்டி நடைபெறவில்லை.
இந்தநிலையில் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் உள்ள ஷெராட்டன் கிராண்ட் ஒயிட் பீல்டு ஓட்டல் வளாகத்தில் இன்று தொடங்குகிறது.
இந்த போட்டியில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்ஸ், ஒரு முறை கோப்பையை வென்ற ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பை, பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி, புனேரி பல்தான், தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் ஜெய்ன்ட்ஸ், உ.பி.யோதா, அரியானா ஸ்டீலர்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறும்.
எஞ்சிய 4 அணிகள் எலிமினேட்டர் (வெளியேற்றுதல்) ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் இரு அணிகள் அரை இறுதி வாய்ப்பை பெறும்.
இன்றைய தொடக்க நாளில் 3 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ்- மும்பை அணிகள் மோதுகின்றன.
எந்த அணி வெற்றியுடன் ஆட்டத்தை தொடங்க போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. சுர்ஜித்சிங் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று ஆவலு டன் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 3 முறை லீக் சுற்றை தாண்டாத தமிழ் தலைவாஸ் அணி இந்த தடவையாவது எழுச்சி பெறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இரவு 9.30 மணிக்கு நடைபெறும் 3-வது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-உ.பி.யோதா அணிகள் மோதுகின்றன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறையை (பயோ பபுல்) பின்பற்றி போட்டிகள் நடைபெறுகிறது.
போட்டியில் பங்கேற்கும் 12 அணி வீரர்களும் ஓட்டலில் தனித்தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஓட்டலை விட்டு வெளியே செல்ல முடியாது. மேலும் தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
புரோ கபடி லீக் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
செஞ்சூரியன்:
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி கேப்டன் டீன் எல்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இந்திய அணி திறமையான வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆடுகளம் மற்றும் சீதோஷ்ண நிலையை இந்திய பவுலர் ஒருவரால் நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றால் அது நிச்சயம் ஜஸ்பிரித் பும்ராவாகத் தான் இருக்கும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...லங்கா பிரீமியர் லீக் - ஜாஃப்னா கிங்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
லங்கா பிரீமியர் லீக்கில் தம்புல்லா ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ஜாஃப்னா கிங்ஸ் தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ சதமடித்து அவுட்டானார்.
ஹம்பந்தோட்டா:
லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் - தம்புல்லா ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் பேட் செய்த ஜாஃப்னா கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ பொறுப்புடன் ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் குர்பாஸ் 70 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதையடுத்து, 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தம்புல்லா ஜெயண்டஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் சமிகா கருணரத்னே மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 75 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இறுதியில், தம்புல்லா அணி 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஜாஃப்னா அணி சார்பில் ஜேடன் செலஸ் 3 விக்கெட்டும், திசாரா பெரேரா, தீக்ஷனா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டது.
நாளை (டிசம்பர் 23-ம் தேதி) நடைபெறும் இறுதிப்போட்டியில் காலே கிளாடியேட்டர்ஸ் - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதையும் படியுங்கள்...விஜய் ஹசாரே கோப்பை - கர்நாடகாவை வீழ்த்தி தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில் தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் தமிழகம் மற்றும் கர்நாடக அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தமிழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஜெகதீசன் சிறப்பாக ஆடி சதமடித்து 102 ரன்னில் ஆட்டமிழந்தார். ரவி ஸ்ரீனிவாசன் 61 ரன்னும், தினேஷ் கார்த்திக் 44 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் தமிழக வீரர் ஷாருக் கான் அதிரடியாக ஆடி 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால்
கர்நாடக அணி சார்பில் பிரவீன் துபே 3 விக்கெட்டும், பிரஷித் 2 விக்கெட்டும், வைஷக், கரியப்பா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கர்நாடக அணி களமிறங்கியது. ஆனால் தமிழக அணியின் சிறப்பான பந்துவீச்சு அவர்களை கட்டுப்படுத்தியது.
கர்நாடக அணி 39 ஓவரில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகமாக எஸ்.சரத் 43 ரன்கள் எடுத்தார். நட்சத்திர ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
தமிழக அணி சார்பில் சிலம்பரசன் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன்மூலம் 151 ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதி போட்டியில், உத்தர பிரதேசம் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இமாசல பிரதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இதையும் படியுங்கள்...ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை - இந்தியாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது ஜப்பான்
முதலாவது அரையிறுதி போட்டியில் தென்கொரியா 6-5 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
டாக்கா:
6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), தென்கொரியா (6 புள்ளி), பாகிஸ்தான் (5 புள்ளி) மற்றும் ஜப்பான்(5 புள்ளி) ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், இன்று மாலை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது.
தொடக்கம் முதல் ஜப்பான் அணி சிறப்பாக ஆடியது. இதனால் முதல் பாதி முடிவில் ஜப்பான் 3-1 என முன்னிலை வகித்தது.
இறுதியில், இந்திய அணியை 5-3 என்னும் கோல் கணக்கில் வீழ்த்திய ஜப்பான் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
வரும் 24ம் தேதி வெளியாக உள்ள ‘83’ திரைப்படம் கிரிக்கெட் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ஆம் ஆண்டில் முதன்முறையாக உலக கோப்பையை வென்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றிக் கதையை அடிப்படையாக கொண்டு ‘83’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.
கபீர் கான் இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில் ரன்வீர்சிங், கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கபிலின் மனைவியான ரோமியா பாடியா வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். 1983ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார்.

தயாரிப்பாளர் மது மட்டேனா, கபீர் கான் மற்றும் விஷ்ணு இந்தூரி இணைந்து தயாரிக்கும் '83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கடந்த ஆண்டு ரன்வீர் சிங், தனது பிறந்தநாளில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் வரும் 24ம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி டெல்லியில் 83 திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர், துப்பாக்கி முனையில் மிரட்டி சிறுமி கற்பழிப்புக்கு உதவியாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாகிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷா. இவரது நண்பர் ஃபர்ஹான் துப்பாக்கி முனையில் மிரட்டி 14 வயது சிறுமியை கற்பழித்துள்ளார். மேலும், படம் எடுத்து அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.
பாதிப்புக்குள்ளான சிறுமியிடம், இந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. அதையும் மீறி தெரிவித்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என யாசீர் ஷா மிரட்டியுள்ளார். இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷலிமார் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் யாசீர் ஷா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர.
‘‘நான் மிகவும் செல்வாக்கு மிக்கவர் என்றும், தனக்கு உயர் பதவியில் இருக்கும் ஒருவரைத் தெரியும் என்றும் யாசீர் ஷா கூறினார். யாசிர் ஷா மற்றும் ஃபர்ஹான் வீடியோக்களை உருவாக்கி, வயது குறைந்த சிறுமிகளை பலாத்காரம் செய்கின்றனர்’’ என புகாரில் அந்த சிறுமி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கூறுகையில் ‘‘இதுகுறித்த தகவல்களை திரட்டி வருகிறோம். உண்மை குறித்து முழுமையாக தகவல் கிடைத்தபின் கருத்து தெரிவிக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளது.
யாசீர் ஷா பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் போட்டியில் விளையாடி 235 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.






