என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பந்தை தட்டிச் செல்லும் வீரர்கள்
    X
    பந்தை தட்டிச் செல்லும் வீரர்கள்

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை - இந்தியாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது ஜப்பான்

    முதலாவது அரையிறுதி போட்டியில் தென்கொரியா 6-5 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
    டாக்கா:

    6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), தென்கொரியா (6 புள்ளி), பாகிஸ்தான் (5 புள்ளி) மற்றும் ஜப்பான்(5 புள்ளி) ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. 

    இந்நிலையில், இன்று மாலை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. 

    தொடக்கம் முதல் ஜப்பான் அணி சிறப்பாக ஆடியது. இதனால் முதல் பாதி முடிவில் ஜப்பான் 3-1 என முன்னிலை வகித்தது. 

    இறுதியில், இந்திய அணியை 5-3 என்னும் கோல் கணக்கில் வீழ்த்திய ஜப்பான் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது. 
    Next Story
    ×