search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜஸ்பிரித் பும்ரா"

    • இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை.
    • பும்ரா விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது.

    இதனிடையே இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்ரவரி 23-ம் தேதி) துவங்குகிறது. அந்த வகையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    இதே போன்று கே.எல். ராகுல் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவாரா என்பது அவரின் உடல்நிலையை பொருத்தே முடிவு செய்யப்படும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

    மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்ட முகேஷ் குமார் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளார். முன்னதாக முகமது சிராஜ் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது விடுவிக்கப்பட்டு, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

    நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்:

    ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ராஜத் படிதர், சர்பராஸ் கான், துருவ் ஜூரெல், கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் ஆகாஷ் தீப்.

    • அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மும்பை:

    இந்திய அணி அயர்லாந்துக்கு சென்று 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 18-ம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது.

    இந்நிலையில், அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் பும்ரா சேர்க்கப்பட்டிருக்கிறார். சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கேப்டனாக பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.எஸ்.கே. வீரர் ருத்ராஜ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் சி.எஸ்.கே. அணியின் ஷிவம் துபேவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

    ஜெய்ஸ்வால், திலக் வர்மா, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா, சுழற்பந்து வீச்சாளராக வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமத், ரவி பிஷ்னோய் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

    அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்களின் விவரம் வருமாறு:

    ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்) யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (வி.கீப்பர்), ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ்கான்.

    • இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக பும்ரா உடல் தகுதியை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • முதுகுவலி பிரச்சினையில் சிக்கி இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அடுத்த வாரம் ஆபரேஷன் நடக்க இருக்கிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு எந்தவித போட்டியிலும் ஆடவில்லை. இதனால் அவர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தவறவிட்டார். இதற்கிடையே பும்ராவுக்கு நியூசிலாந்தில் கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் ஆபரேஷன் நடைபெற்றது. இதனால் அவர் நடப்பு ஐ.பி.எல். போட்டியில் ஆடவில்லை. ஜூன் மாதம் 7-ந்தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் பும்ரா இடம் பெறுவது கடினம் தான். இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக பும்ரா உடல் தகுதியை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பும்ரா மற்றும் முதுகு காயத்தால் அவதிப்படும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் தற்போதைய நிலை குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு நியூசிலாந்தில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பும்ராவுக்கு தற்போது வலி எதுவுமில்லை. டாக்டரின் ஆலோசனைபடி ஆபரேஷன் முடிந்த 6 வாரத்துக்கு பிறகு காயத்தில் இருந்து மீண்டு பழைய உடல் தகுதியை எட்டுவதற்கான பயிற்சி திட்டத்தை பும்ரா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இருக்கிறார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் 'முதுகுவலி பிரச்சினையில் சிக்கி இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அடுத்த வாரம் ஆபரேஷன் நடக்க இருக்கிறது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து பும்ரா விலகினார்.
    • பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவக் குழு மற்றும் நிபுணர்களுடன் பிசிசிஐ ஆலோசனை.

    இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பயிற்சின் போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.

    இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து பும்ரா விலகினார். மேலும், உலகக்கோப்பை டி20 தொடரிலும் பும்ரா பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவியது. அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டார் என பி.சி.சி.ஐ. இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவக் குழு மற்றும் நிபுணர்களுடன் நடைபெற்ற விரிவான மதிப்பீடு மற்றும் ஆலோசனைக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டி20 உலக கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகியது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதில் அணியில் இடம் பெற உள்ள வேகப்பந்து வீச்சாளர் பெயரை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என தெரிகிறது.

    ×