என் மலர்

    நீங்கள் தேடியது "pakisthan"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகிஸ்தானில் விமானப்படை விமானம், பயிற்சியின் போது விபத்துக்குள்ளானதில், பயிற்சி விமானி உயிரிழந்தார். #pakisthan #planecrash # traineepilotkilled
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில்  உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் விமானப்படை விமானம், வழக்கமான பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. இதில் பயிற்சி விமானி ஒருவர் பலியாகியுள்ளார்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘எஃப்-7பிஜி விமானம், வழக்கமான செயல்பாட்டு பயிற்சியின் போது, ​​மஸ்தூங்கிற்கு அருகே தரையில் விழுந்து நொறுங்கியது.  இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக விமானத்தின் பயிற்சி விமானி பலியானார். ஆனால், இவ்விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை’ என தெரிவித்தனர்.

    இவ்விமானம் சீன நிறுவனத்தால் சோவியத் காலத்து மிக்-21 ரக விமானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த விமானங்கள் சமீப காலமாக அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. இதனையடுத்து பாகிஸ்தான் விமானப் படையினர் எஃப்-7 விமானங்களை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக ஜேஎஃப்-17 ரக விமானங்களை வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.  #pakisthan #planecrash  #traineepilotkilled

    ×