என் மலர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி
Byமாலை மலர்23 Jan 2019 4:14 PM IST (Updated: 23 Jan 2019 4:14 PM IST)
பாகிஸ்தானில் விமானப்படை விமானம், பயிற்சியின் போது விபத்துக்குள்ளானதில், பயிற்சி விமானி உயிரிழந்தார். #pakisthan #planecrash # traineepilotkilled
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் விமானப்படை விமானம், வழக்கமான பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. இதில் பயிற்சி விமானி ஒருவர் பலியாகியுள்ளார்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘எஃப்-7பிஜி விமானம், வழக்கமான செயல்பாட்டு பயிற்சியின் போது, மஸ்தூங்கிற்கு அருகே தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக விமானத்தின் பயிற்சி விமானி பலியானார். ஆனால், இவ்விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை’ என தெரிவித்தனர்.
இவ்விமானம் சீன நிறுவனத்தால் சோவியத் காலத்து மிக்-21 ரக விமானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த விமானங்கள் சமீப காலமாக அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. இதனையடுத்து பாகிஸ்தான் விமானப் படையினர் எஃப்-7 விமானங்களை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக ஜேஎஃப்-17 ரக விமானங்களை வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. #pakisthan #planecrash #traineepilotkilled

Next Story
×
X