என் மலர்
விளையாட்டு

சிறப்பான தொடக்கம் கொடுத்த ஜோடி
லங்கா பிரீமியர் லீக் - ஜாஃப்னா கிங்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
லங்கா பிரீமியர் லீக்கில் தம்புல்லா ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ஜாஃப்னா கிங்ஸ் தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ சதமடித்து அவுட்டானார்.
ஹம்பந்தோட்டா:
லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் - தம்புல்லா ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் பேட் செய்த ஜாஃப்னா கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ பொறுப்புடன் ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் குர்பாஸ் 70 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதையடுத்து, 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தம்புல்லா ஜெயண்டஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் சமிகா கருணரத்னே மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 75 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இறுதியில், தம்புல்லா அணி 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஜாஃப்னா அணி சார்பில் ஜேடன் செலஸ் 3 விக்கெட்டும், திசாரா பெரேரா, தீக்ஷனா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டது.
நாளை (டிசம்பர் 23-ம் தேதி) நடைபெறும் இறுதிப்போட்டியில் காலே கிளாடியேட்டர்ஸ் - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதையும் படியுங்கள்...விஜய் ஹசாரே கோப்பை - கர்நாடகாவை வீழ்த்தி தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
Next Story






