என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தமிழ்நாடு அணி வீரர்கள்
    X
    தமிழ்நாடு அணி வீரர்கள்

    விஜய் ஹசாரே கிரிக்கெட்: தமிழ்நாடு-கர்நாடகா நாளை கால் இறுதியில் மோதல்

    விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, சவுராஷ்டிரா, இமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா, விதர்பா, கேரளா, சர்வீசஸ் ஆகிய 8 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.
    ஜெய்ப்பூர்:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிக்கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் கால் இறுதிக்கு முந்தைய சுற்று முடிந்தது.

    இதன்படி தமிழ்நாடு, சவுராஷ்டிரா, இமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா, விதர்பா, கேரளா, சர்வீசஸ் ஆகிய 8 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

    கால் இறுதி ஆட்டங்கள் நாளை நடக்கிறது. தமிழக அணி கால் இறுதி ஆட்டத்தில் கர்நாடகாவை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்று தமிழக அணி அரை இறுதிக்கு முன்னேறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக அணி லீக் ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றது. 2-ல் தோற்றது. தமிழக அணி ஏற்கனவே லீக் ஆட்டத்தில் கர்நாடகாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    இதனால் நம்பிக்கையுடன் விளையாடி அந்த அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

    நாளை நடைபெறும் மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் இமாச்சல பிரதேசம்- உத்தர பிரதேசம் அணிகள் மோதுகின்றன. 22-ந் தேதி நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் சவுராஷ்டிரா- விதர்பா, கேரளா- சர்வீசஸ் அணிகள் மோதுகின்றன.

    24-ந் தேதி அரை இறுதி ஆட்டங்களும், இறுதிப் போட்டி 26-ந் தேதியும் நடைபெறுகிறது.
    Next Story
    ×