search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விபத்தில் சிக்கி பலியான வாலிபர் நாய் உருவத்தில் வீட்டிற்கு வந்ததாக கிராம மக்கள் இடையே பரபரப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    விபத்தில் சிக்கி பலியான வாலிபர் நாய் உருவத்தில் வீட்டிற்கு வந்ததாக கிராம மக்கள் இடையே பரபரப்பு

    • சாலை விபத்தில் விக்னேஷ் இறந்து ஒரு வாரம் கழித்து அவரின் வீட்டிற்கு நாய் ஒன்று வந்துள்ளது.
    • விக்னேஷ் விருப்பப்பட்டு சாப்பிடும் உணவுகளையே இந்த நாயும் ஆசைப்பட்டு சாப்பிடுவதாக அந்த குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் காசினகெரே பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(23). அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தினமும் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு இவர் வீட்டுக்கு திரும்பியபோது விபத்து ஏற்பட்டு உள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவரிடம் போலீசார் விபத்து குறித்து விசாரித்து உள்ளனர். அப்போது அவர் நாய் குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும், மேலும் நாய் ஒன்று சாலையில் திடீரென வந்தது. அப்போது நாய் மீது மோதக்கூடாது என்பதால் வாகனத்தை உடனே திருப்பினேன். அப்போது நான் நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதினேன் என்று கூறியுள்ளார்.

    இதை தொடர்ந்து தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.

    சாலை விபத்தில் விக்னேஷ் இறந்து ஒரு வாரம் கழித்து அவரின் வீட்டிற்கு நாய் ஒன்று வந்துள்ளது. ஊரில் அதுவரை இல்லாத நாய் திடீரென அங்கே வந்துள்ளது. விக்னேஷ் பெற்றோர் நாயை விரட்ட முயன்றுள்ளனர். எவ்வளவு அடி வாங்கியும் அந்த நாய் செல்லவில்லை.

    எங்கும் செல்லாமல் அந்த நாய் அங்கேயே இருந்துள்ளது. முதலில் இதை விரட்ட முயன்றவர்கள் வேறு வழியில்லாமல் விட்டுள்ளனர். அதன்பின்தான் அந்த நாய் விக்னேஷ் புகைப்படத்தை பார்த்து வீட்டிற்குள் கண்கள் கலங்கி உள்ளது. அந்த நாயின் முகத்தை உற்றுப்பார்த்து விக்னேஷ் குடும்பத்தினர் இதன் முகம் விக்னேஷ் முகம் போலவே இருப்பதாக கூறியுள்ளனர்.

    அப்படியே விக்னேஷ் முகம் அந்த நாயிடம் முகத்தோடு ஒத்துபோய் உள்ளது. இதை பார்த்து குடும்பமே கதறி அழுதுள்ளனர். தொடர்ந்து நாயை வீட்டிலேயே வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த நாய் வேறு யாரும் இல்லை. இதுதான் விக்னேஷ். நாயாக மறுபிறவி எடுத்து வந்துள்ளான் என்று கூறியுள்ளனர். விக்னேஷ் விருப்பப்பட்டு சாப்பிடும் உணவுகளையே இந்த நாயும் ஆசைப்பட்டு சாப்பிடுவதாக அந்த குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    அதோடு இல்லாமல் அந்த மொத்த கிராமமும் இந்த சம்பவத்தால் அலறி உள்ளது. அந்த நாயின் முகத்தை உற்றுப்பார்த்து விக்னேஷ் ஊரை சேர்ந்தவர்கள் இதன் முகம் விக்னேஷ் முகம் போலவே இருப்பதாக கூறியுள்ளனர். அவரின் முகத்தில் இருக்கும் தழும்பு கூட நாயின் முகத்தில் இருப்பதாக கூறியுள்ளனர்.

    இன்னும் சிலரோ விக்னேஷ் சாக காரணமாக இருந்த நாயாக கூட இது இருக்கலாம், குற்ற உணர்ச்சி காரணமாக இங்கே வந்து இருக்கலாம். மற்றபடி இது மறுபிறவி ஆக இருக்க வாய்ப்பே இல்லை. அந்த நாய்தான் குறுக்கே வந்திருக்கும் என்றும் கிராமத்தினர் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கர்நாடகா மாநிலம் முழுவதும் இந்த சம்பவம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    Next Story
    ×