search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நெற்றி காயத்துடன் இப்தார் விருந்தில் பங்கேற்ற மம்தா
    X

    நெற்றி காயத்துடன் இப்தார் விருந்தில் பங்கேற்ற மம்தா

    • மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 14-ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார்.
    • அந்த விபத்தில் அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெற்றார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 14-ம் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் மம்தா பானர்ஜியின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    நெற்றியில் காயத்துடன் மயங்கிய நிலையில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மம்தா விரைவில் குணமடைய வேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சிகிச்சை முடிந்து நலமுடன் மம்தா பானர்ஜி வீடு திரும்பினார்.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் நெற்றி காயத்துடன் மம்தா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கொல்கத்தா மேயர் மற்றும் மந்திரி பிர்ஹாத் ஹக்கீம், எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×