search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இப்தார் நோன்பு"

    • மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 14-ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார்.
    • அந்த விபத்தில் அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெற்றார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 14-ம் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் மம்தா பானர்ஜியின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    நெற்றியில் காயத்துடன் மயங்கிய நிலையில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மம்தா விரைவில் குணமடைய வேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சிகிச்சை முடிந்து நலமுடன் மம்தா பானர்ஜி வீடு திரும்பினார்.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் நெற்றி காயத்துடன் மம்தா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கொல்கத்தா மேயர் மற்றும் மந்திரி பிர்ஹாத் ஹக்கீம், எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு நடந்தது.
    • அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செந்தாமரை கண்ணன் முன்னிலை வகித்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள சிக்கல் கிராமத்தில் காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் தெய்வேந்திரன், மாநில பொதுச் செயலாளர் ரமேஷ்பாபு மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கோட்டை முத்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செந்தாமரை கண்ணன் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறுபான்மை மாவட்ட தலைவர் வாணி இப்ராகிம், மாவட்ட அமைப்பு சாரா தலைவர் முத்துவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சிக்கல் நகர் செயலாளர் அம்ஜத் கான், சிக்கல் ஊராட்சி தலைவர் பரக்கத் ஆயிஷா சைபுதீன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஆர்தர், பச்சமால், நிர்வாகிகள் செய்யது இப்ராகிம், கனி, முனியசாமி, குமைதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • ரம்ஜான் மாத நோன்பை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இஸ்லாமியர்கள் துவா செய்து அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரியில் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சார்பாக ரம்ஜான் மாத நோன்பை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தருமபுரி தனியார் திருமண மண்டபத்தில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் கூட்டமைப்பு தலைவர் சுபேதார் தலைமை வகித்தார்.

    இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மற்றும் அ.தி.மு.க. அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இஸ்லாமியர்கள் துவா செய்து அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.

    நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில், நகர செயலாளர்கள் பூக்கடை ரவி, நாட்டான் மாது, மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பாமக மற்றும் ஜமாத் கமிட்டி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இஸ்லாமிய பேரவை மாநில செயலாளர் அப்துர் ரகுமான் தலைமை தாங்கினார்.
    • நிர்வாகிகள் முத்து முகமது மக்கா கலீல், அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தை கட்சி இலக்கிய ஜனநாயக பேரவை சார்பில் 19-ம் ஆண்டு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி எழும்பூரில் நடந்தது. இஸ்லாமிய பேரவை மாநில செயலாளர் அப்துர் ரகுமான் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முத்து முகமது மக்கா கலீல், அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆளுர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ வரவேற்றார், கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி இப்தார் உரையாற்றினார்.

    இதில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம்.அப்துல் ரகுமான், ஜவாஹிருல்லா எம்.எல்.எ, நவாஸ்கனி எம்.பி, எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், இயக்குனர் அமிர், திரைப்பட தயாரிப்பாளர் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தெற்கெல்லை போராளி கொடிக்கால் ஷேக், அப்துல்லாஹசன், "நாஞ்சில் நாட்டின் ஒரு சமுகப்போராளி" என்ற நூலை திருமாவளவன் வெளியிட ஏ.ஆர்.ஜாபர் சாதிக், இயக்குனர் அமீர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியை ஏ.ஆர். முகமது சலீம் ஒருங்கிணைத்தார்.

    • தி.மு.க. சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
    • அப்போது பேசிய அவர் மிலாது நபிக்கு விடுமுறை அறிவித்தது திமுக அரசு என தெரிவித்தார்.

    சென்னை:

    சென்னை நீலாங்கரையில் தி.மு.க. சார்பில் புனித ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    இஸ்லாமிய மக்களுக்கு எனது ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மத வேறுபாடு இல்லாமல் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திராவிட முன்னேற்ற கழகம் எப்பொழுது ஆட்சியில் வந்ததோ, அப்போது இஸ்லாமிய சமுதாயத்திற்காக பல்வேறு திட்டங்கள், சாதனைகள் உருவாக்கி தரப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு திட்டங்களை கொண்டுவந்தது தி.மு.க. அரசு.

    முதல் முறை ஆட்சிக்கு வந்தவுடன் மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர். அதன்பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சி அதனை ரத்துசெய்தது. மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் மிலாது நபிக்கு அரசு விடுமுறை கொண்டுவரப்பட்டது.

    கோரிக்கை வைக்காமலேயே சிறுபான்மையினருக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது தி.மு.க. அரசு. கோரிக்கை வைக்காமலே செய்யும் அரசு, கோரிக்கை வைத்தால் செய்யாமல் இருக்குமா? அனைத்தையும் உள்ளடக்கிய அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    • நாட்டுமக்கள் நலமுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
    • நல்லிணக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் சமூக நல்லிணக்க ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் தலைமை தாங்கினார். மாநகர இளைஞரணி துணை செயலாளர் நாசர்அலி முன்னிலை வகித்தார்.

    மாவட்ட பிரதிநிதி முகமது சைபுதீன் வரவேற்றார். மாநகர் மாவட்ட அவைத்தலைவர் நேமிநாதன், பொருளாளர் நல்லூர் மணி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் சாந்தாமணி, 20-வது வார்டு கவுன்சிலர் குமார், மங்கலம் பகுதி ம.தி.மு.க. நிர்வாகிகள் பாபுசேட் பஷீர் அகமது, 28-வது வார்டு பிரதிநிதி அக்பர் அலி ஆகியோர் வாழ்த்து பேசினர்.

    இதில் ஜி.கே.கார்டன் பள்ளி தலைமை இமாம் ஹாஜி மவுலவி முகமது அப்துல் கனி பிரார்த்தனை செய்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சாமுண்டிபுரம் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலின் தலைவர் நாசர், பொருளாளர் முகம்மது இஸ்மாயில், செயலாளர் ஹிதாயத்துல்லா, முத்தவல்லி ஜமாலுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சமூக ஒற்றுமை வேண்டியும், நாட்டுமக்கள் நலமுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மும்மதத்தினரும் சமூக நல்லிணக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    முடிவில் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் ஏற்பாட்டின் பேரில் நலஉதவிகள் வழங்கப்பட்டது. இதில் ம.தி.மு.க. பகுதி செயலாளர்கள் குமரவேல், திருநாவுக்கரசு, ஆனந்தகுமார், தளபதி பிரபு, செந்தில்குமார், நல்லூர் ராஜு, மாநகர துணை செயலாளர் பூபதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×