search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இனி ராணுவ சீருடைகளை தைத்து தர முடியாது - இஸ்ரேலிடம் அதிரடி காட்டிய கேரளா நிறுவனம்
    X

    இனி ராணுவ சீருடைகளை தைத்து தர முடியாது - இஸ்ரேலிடம் அதிரடி காட்டிய கேரளா நிறுவனம்

    • இரு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
    • பிலிப்பைன்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு ராணுவ சீருடையை தயாரித்து வழங்கி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் தேதி திடீரென ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அதோடு இஸ்ரேலுக்குள் தரைவழியாகவும் ஊடுருவி தாக்குதலை தொடுத்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் எதிர் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

    இதில் இஸ்ரேல், காசா நகரின் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றது. இரு தரப்பினரும் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள கூத்துபறம்பு தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது மரியன் அப்பாரல்ஸ் எனும் ஆடை தயாரிப்பு நிறுவனம். இங்கு 1,500 மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனை தாமஸ் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் இஸ்ரேல், கத்தார், பிலிப்பைன்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு ராணுவ சீருடையை தயாரித்து வழங்கி வருகிறது.

    இந்த நிலையில், இந்நிறுவனம் இஸ்ரேல் ராணுவத்திற்கு சீருடைகளை தயாரித்து வழங்க முடியாது என்று அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் சுமார் 1 லட்சம் சீருடைக்கான ஆர்டரையும் ரத்து செய்து விட்டது.

    Next Story
    ×