search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடியரசுத் தலைவர் தேர்தல்- திரவுபதி முர்மு மனுதாக்கல் செய்தார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    குடியரசுத் தலைவர் தேர்தல்- திரவுபதி முர்மு மனுதாக்கல் செய்தார்

    • தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலாளரிடம் திரவுபதி முர்மு வேட்பு மனுவை அளித்தார்.
    • அதிமுக சார்பில் ஓ.பி.எஸ், தம்பிதுரை உள்ளிட்டோரும் பாஜக ஆளும் பிற மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.

    குடியரசுத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இருவரும் முக்கியத் தலைவர்களிடம் ஆதரவுக் கோரி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலாளரிடம் திரவுபதி முர்மு வேட்பு மனுவை அளித்தார்.

    பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அதிமுக சார்பில் ஓ.பி.எஸ், தம்பிதுரை உள்ளிட்டோரும் பாஜக ஆளும் பிற மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.

    Next Story
    ×