search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடுபவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு- பிரியங்கா காந்தி
    X

    பிரியங்கா காந்தி

    அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடுபவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு- பிரியங்கா காந்தி

    • இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்கும் இந்த திட்டத்திற்கு கவிதையின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    • ஜனநாயக வழியில், சத்தியம் மற்றும் அகிம்சை வழியில் போராட்டம் நடத்த வேண்டும்.

    அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் அமைதி வழி போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை அமைதியான முறையில் எதிர்த்துப் போராடுபவர்களுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவை வழங்கும் என்று உறுதியளித்தார்.

    இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்கும் இந்த திட்டத்திற்கு கவிதையின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும், இந்த திட்டம் ராணுவத்தை அழிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனநாயக வழியில், சத்தியம் மற்றும் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி மத்திய அரசை பின்வாங்க செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    உங்களை விட பெரிய தேசபக்தர் இல்லை, நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், உங்கள் கண்களைத் திறந்து, போலி தேசியவாதிகள் மற்றும் போலி தேசபக்தர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் பிரியங்கா குறிப்பிட்டார்.



    Next Story
    ×