search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மம்தா, போலீசாருக்கு நோ: சிசிடிவி காட்சிகளை பொதுமக்கள் 100 பேருக்கு காட்டுகிறார் கவர்னர்
    X

    மம்தா, போலீசாருக்கு "நோ": சிசிடிவி காட்சிகளை பொதுமக்கள் 100 பேருக்கு காட்டுகிறார் கவர்னர்

    • கவர்னர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார்.
    • காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    மேற்கு வங்காள கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம்பெண் ஒருவர் கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் போலீசார் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை 100 பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும். ஆனால் மம்தா பானர்ஜி மற்றும் மேற்கு வங்காள போலீசாரிடம் வழங்கப்படமாட்டாது என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக கவர்னர் மாளிகை தெரிவித்திருப்பதாவது:-

    பெண் புகார் கொடுத்த சம்பவம் தொடர்பாக சட்டவிரோதம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான மேற்கு வங்காள மாநில போலீசார் விசாரணையின் கீழ் சிசிடிவி காட்சிகளை கவர்னர் மாளிகை வழங்காது.

    பொதுமக்கள் இ-மெயில் அல்லது டெலிபோன் மூலமாக பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தால், முதல் 100 பொதுமக்களுக்கு கவர்னர் மாளிகையில் வைத்து சிசிடிவி காட்சிகள் காண்பிக்கப்படும். இது நாளை காலை நடைபெறும்.

    அரசியல்வாதி மம்தா பானர்ஜி மற்றும் அவரது காவல்துறையைத் தவிர, சிசிடிவி காட்சிகளை மேற்கு வங்கத்தில் உள்ள எந்த குடிமகனும் பார்க்க முடியும் என்று ஆளுநர் முடிவு செய்துள்ளார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக,

    மேற்கு வங்காள கவர்னராக இருப்பவர் ஆனந்த போஸ். இவர், கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம்பெண் ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த இளம்பெண் கடந்த 3-ந்தேதி முன்தினம் பரபரப்பு குற்றச்சட்டை தெரிவித்தார்.

    மேலும் இது குறித்து அவர் போலீசிலும் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பதவியில் இருக்கும் கவர்னர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள கவர்னர் ஆனந்த போஸ், இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் வாய்மையே வெல்லும் எனக்கூறி இருந்த அவர், இந்த குற்றச்சாட்டுகளால் அரசின் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான தனது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

    அதேநேரம் தனக்கு எதிராக இன்னும் அதிகமான புகார்களை எதிர்பார்ப்பதாக கவர்னர் ஆனந்தபோஸ் கூறியுள்ளார்.

    Next Story
    ×