

அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ராவிற்கு தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், ஆறு இடங்களில் சோதனை நடத்தி வருவதாகவும் அமலாகத்துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநில பள்ளி ஆசிரியர்கள் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் தினேஷ் கோதானியா மற்றும் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது 12 லட்சம் ரூபாய் கைப்பற்றியதுடன், குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றியது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவருக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இதுபோன்ற சோதனை அசோக் கெலாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே FEMA வழக்கு தொடர்பாக ஜெய்ப்பூர் அலுவலகத்தில் நாளை ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டிற்கு சம்மன் அனுப்பியுள்ளது.