என் மலர்tooltip icon

    இந்தியா

    • செல்போனில் குற்றப்பிரிவு போலீஸ்காரர் என கூறி ஒருவர் வீடியோ காலில் பேசினார்.
    • குண்டு வெடிப்பு மற்றும் கடத்தல் வழக்குகளில் முதியவர் செல்போன் எண் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஸ்ரீ நகர் காலனியை சேர்ந்தவர் 78 வயது முதியவர். இவர் மத்திய அரசு ஊழியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவருடைய செல்போனில் குற்றப்பிரிவு போலீஸ்காரர் என கூறி ஒருவர் வீடியோ காலில் பேசினார்.

    குண்டு வெடிப்பு மற்றும் கடத்தல் வழக்குகளில் முதியவர் செல்போன் எண் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிபிஐயின் நோட்டீஸ்களை காட்டினார். இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் முதியவர் கணக்கில் இருந்து குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு ரூ.51 லட்சத்தை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார். வழக்கு முடிந்த பிறகு நீங்கள் அனுப்பும் பணத்தை மீண்டும் உங்களுடைய வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும் என கூறினார்.

    போலீசார் இந்த வழக்குகளில் தன்னை கைது செய்து விடுவார்களோ என பயந்த முதியவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.51 லட்சத்தை அனுப்பி வைத்தார். பின்னர் டிஜிட்டல் கைது மூலம் தான் ஏமாற்றப்பட்டுதை அறிந்த முதியவர் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்தது ஆன்லைன் விற்பனை நிறுவனமா? அல்லது கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களா? என்பது தெரியவில்லை.
    • மோசடி குறித்து குமாரசாமி லே-அவுட் போலீசில் பிரேம் ஆனந்த் புகார் அளித்தார்.

    பெங்களூரு குமாரசாமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பிரேம் ஆனந்த். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், ஒரு ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ரூ.1.85 லட்சத்திற்கு ஒரு செல்போனை ஆர்டர் செய்திருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் அவர் ஆர்டர் செய்த செல்போன் கூரியர் மூலமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், கூரியர் நிறுவன ஊழியரும், நேற்று முன்தினம் பிரேம் ஆனந்த் வீட்டுக்கு வந்து ஒரு பார்சலை கொடுத்துவிட்டு சென்றார். உடனே அவரும், தான் ஆசையாக ஆர்டர் செய்த செல்போன் வந்ததாக நினைத்து பார்சலை பிரித்து பார்த்தார்.

    அப்போது அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த பார்சலில் செல்போன் பாக்சுக்குள் செல்போனுக்கு பதில் ஒரு பளிங்கு கல் இருந்தது. ரூ.1.85 லட்சம் மதிப்பிலான செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்ததால் கோபம் அடைந்த பிரேம் ஆனந்த் உடனடியாக கூரியர் ஊழியரின் செல்போனுக்கு அழைத்தார். ஆனால் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை.

    செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்தது ஆன்லைன் விற்பனை நிறுவனமா? அல்லது கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களா? என்பது தெரியவில்லை.

    இந்த மோசடி குறித்து குமாரசாமி லே-அவுட் போலீசில் பிரேம் ஆனந்த் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மண்டல பூஜை காலம் மட்டுமின்றி, மகரவிளக்கு பூஜை காலத்திலும் இந்த முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து விரதம் இருந்து சாமி தரிசனம் செய்ய வருவார்கள். பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தபடியே இருப்பது சபரிமலையின் தனிச்சிறப்பாகும்.

    இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்தமாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக நவம்பர் 16-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெறுகிறது.

    இதனால் நவம்பர் 17-ந்தேதி முதல் டிசம்பர் 27-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். தினமும் வழக்கமான பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த நாட்களில் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்யலாம்.

    சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் முன்பதிவு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அந்த முறை அமல்படுத்தப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு (மெய் நிகர் வரிசை) மூலமாக 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் (உடனடி முன்பதிவு) மூலமாக 20 ஆயிரம் பேர் என தினமும் 90 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மண்டல பூஜை காலம் மட்டுமின்றி, மகரவிளக்கு பூஜை காலத்திலும் இந்த முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மண்டல பூஜை காலத்தில் சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை (1-ந்தேதி) தொடங்குகிறது.

    பக்தர்கள் தாங்கள் சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய தினத்தை தேர்வு செய்து, கேட்கக்கூடிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்து முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்ததற்கான அனுமதி சீட்டு புக்கிங் செய்யக்கூடிய இ-மெயில் முகவரிக்கு அனுப்பப்படும்.

    ஆன்லைன் முன்பதிவுக்கு இதுவரை கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்கள் மரணமடைந்தால், அவர்களது குடும்பத்திற்கு ரூ.3லட்சம் இன்சூரன்சு வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    இதன் காரணமாக ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. ஆனால் இது கட்டாயமில்லை எனவும், விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த கட்டணதை செலுத்தலாம். அதற்கு தகுந்தாற்போல் ஆன்லைன் முன்பதிவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

    • சர்தார் வல்லபாய் படேல் ஒரு சிறந்த தேசபக்தர்.
    • இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கு பின்னால் உந்து சக்தியாக வல்லபாய் படேல் இருந்தார்.

    இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

    டெல்லியில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்தார் வல்லபாய் படேல் ஒரு சிறந்த தேசபக்தர்.

    தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பியவர். அவர் தனது அசைக்க முடியாத உறுதிப்பாடு, அசாத்திய தைரியம் மற்றும் திறமையான தலைமை மூலம் நாட்டை ஒன்றிணைக்கும் வரலாற்றுப் பணியை நிறைவேற்றினார். அவரது அர்ப்பணிப்பும் தேசிய சேவை மனப்பான்மையும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, நாம் ஒன்றுபட்டு, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளில் இந்தியா அவருக்கு மரியாதை செலுத்துகிறது. இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கு பின்னால் உந்து சக்தியாக அவர் இருந்தார், இதன் மூலம் நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அதன் விதியை வடிவமைத்தார். தேசிய ஒருமைப்பாடு, நல்லாட்சி மற்றும் பொது சேவை மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இளம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. தன்னம்பிக்கை கொண்ட இந்தியா என்ற அவரது தொலைநோக்கு பார்வையை நிலைநிறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

    • திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்து தங்களது மொய்ப்பணத்தை செலுத்தினர்.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஒவ்வொரு பகுதியிலும் திருமண விழாக்கள் பாரம்பரிய முறைப்படி நடைபெறுவது வழக்கம். இதையொட்டி நடைபெறும் ஏற்பாடுகளை வித்தியாசமாக மேற்கொள்ளும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. திருமண அழைப்பிதழ் அச்சடிப்பதிலும், ஆடைகளை வடிவமைப்பதிலும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமைகளை புகுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், கேரளாவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நடைபெற்ற மொய் விருந்தில் கியூ ஆர் கோடு மூலம் பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மணமக்களின் உறவினர் ஒருவர் ஆன்லைன் பணபரிவர்த்தனைக்கான கியூ ஆர் கோடு பொறித்த அட்டையை தனது சட்டைப்பையில் ஒட்டி இருந்தார். திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்து தங்களது மொய்ப்பணத்தை செலுத்தினர்.

    இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.



    • காங்கிரஸ் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41-வது நினைவு நாளான இன்று காங்கிரஸ் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
    • வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

    இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

    இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் கெவாடியா பகுதியில் உள்ள வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சர்தார் வல்லபாய் படேலின் பிரம்மாண்ட சிலைக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது.

     

    • திருடியவற்றைத் திருப்பித் தருமாறு பிரமிளா கேட்டுள்ளார்.
    • தலைமறைவான அவரைப் பிடிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மத்திய பிரதேச மாநிலத்தின் ஜஹாங்கிராபாதில் துணை காவல் ஆய்வாளராக (டிஎஸ்பி) பணிபுரிபவர் கல்பனா ரகுவன்ஷி (56).

    கல்பனாவும், அவரது தோழியான பிரமிளா திவாரியும் நீண்டகால நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில், செப்டம்பர் 24 ஆம் தேதியில் பிரமிளா வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, அவரது வீட்டுக்குள் நுழைந்த கல்பனா, பிரமிளாவின் பணப்பையிருந்து ரூ. 2 லட்சம் பணத்தையும், மொபைல் போனையும் திருடியுள்ளார்.

    சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கல்பனாவின் கையில் பணத்தை எடுத்துச் செல்வது உறுதியானவுடன், திருடியவற்றைத் திருப்பித் தருமாறு பிரமிளா கேட்டுள்ளார். இருப்பினும், மொபைல் போனை மட்டும் கல்பனா கொடுத்துள்ளார்.

    இதனையடுத்து, தனது மகளின் பள்ளிக் கட்டணத்துக்காக வைத்திருந்த பணத்தை திருடியதாக, கல்பனா மீது காவல் நிலையத்தில் பிரமிளா புகார் அளித்தார்.

    சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக எகொண்டு, டிஎஸ்பி கல்பனா மீது போலீசார் திருட்டு வழக்கை பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து தலைமறைவான அவரைப் பிடிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  கல்பனா திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

    • பிரிட்டனில் இருந்து இந்த ஆண்டு சுமார் 100 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்
    • தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தனர்.

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்றது முதல் சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் செயல்முறையில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

    நாடுகடத்தப்படுபவர்கள் கைவிலங்கிடப்பட்டு மோசமாக நடத்தப்படுவது குறித்து பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

    இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 2,790 இந்தியர்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை நாடுகடத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், " இந்த ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் 29 வரை, தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 2,790க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர் " என்று தெரிவித்தார்.

    இதேபோல் பிரிட்டனில் இருந்து இந்த ஆண்டு சுமார் 100 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். 

    • மனீஷாவை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்கவும் அவர்கள் நிச்சயித்ததாகக் கூறப்படுகிறது.
    • இது ரவிக்குத் தெரியவரவே, இரவில் மனீஷாவின் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம், ஹமீர்பூரைச் சேர்ந்தவர் 35 வயதான ரவி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான மனீஷா என்பவரை இவர் காதலித்து வந்துள்ளார்.

    இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், இவர்களது காதலுக்கு மனீஷாவின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

    மேலும், மனீஷாவை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்கவும் அவர்கள் நிச்சயித்ததாகக் கூறப்படுகிறது.

    இது ரவிக்குத் தெரியவரவே, நேற்று முன் தினம் (புதன்கிழமை) இரவு மனீஷாவின் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார். அப்போது, மனீஷாவின் குடும்பத்தினர் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து, மரத்தில் கட்டிவைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ரவி இறந்ததைக் கண்ட மனீஷாவின் குடும்பத்தினர் அச்சத்தில் மூழ்கினர். கொலை வழக்கு தன் மீது வந்துவிடுமோ என்ற பயத்தில், மனீஷாவின் மாமா பிண்டூ என்பவர் அங்கியேய தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    மனீஷாவின் குடும்பத்தினர் உடனடியாக ரவி மற்றும் பிண்டூ ஆகிய இருவரையும் அருகிலுள்ள சமூக சுகாதார மையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு ரவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

    பிண்டூவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    இதற்கிடையே, காதலன் ரவி இறந்த துக்கத்தில் மனீஷாவும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரையும் மீட்டு அதே சமூக சுகாதார மையத்தில் சேர்த்தனர். தற்போது பிண்டூ மற்றும் மனீஷா ஆகிய இருவரது நிலையும் கவலைக்கிடமாக தெரிகிறது.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

    • பிகாரில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தோல்வியை சந்திக்க உள்ளது.
    • 243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

    243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தல் பிரசார களம் பரபரப்பாகி உள்ள நிலையில் நேற்று பீகாரில் சாப்ராவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், பிகாரில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தோல்வியை சந்திக்க உள்ளது. பிகார் மக்களை அவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். 

    பஞ்சாபில் இருந்த காங்கிரஸ் முதல்வர் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்களை மாநிலத்திற்குள் அனுமதிக்காதீர்கள் என்று பகிரங்கமாக கூறினார்.

    அந்தச் சமயத்தில், அதே மேடையில், தற்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மகள்(பிரியங்கா காந்தி), அதற்குச் சந்தோஷமாக கைதட்டிக்கொண்டிருந்தார்.

    அதேபோல் , கர்நாடகா, தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள், பீகார் மக்களை அவதூறு செய்கின்றனர். தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது.

    இவ்வளவு நடந்தும், பீகாரில் ஆர்ஜேடி அமைதியாக வாயடைத்துப் போனது போல் இருக்கிறது. இந்தத் தேர்தலில் அவர்கள் எல்லையைக் கடந்துவிட்டனர்.

    பீகாரை அவமதித்த அதே காங்கிரஸ் தலைவர்களை, இப்போது ஆர்ஜேடி இங்கே பிரச்சாரம் செய்ய அழைத்துள்ளது" என பேசியுள்ளார்.  

    முன்னதாக ஒடிசா சட்டமன்றத் தேர்தலின்போது, புரி ஜெகநாதர் கோயிலின் கருவூல சாவி தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில், பிகார் தேர்தலில் தமிழ்நாட்டை குறிப்பிட்டு பிரதமர் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

    • பிப்ரவரி 17 அன்று தொடங்கி ஏப்ரல் 9 வரை நடைபெற உள்ளன.
    • தேர்வு அட்டவணையை cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    2025-26ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, சிபிஎஸ்இ 10  ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி முதல் ஜுலை 15ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், 12ஆம் வகுப்புத் தேர்வுகளும் பிப்ரவரி 17 அன்று தொடங்கி ஏப்ரல் 9 வரை நடைபெற உள்ளன.

    பெரும்பாலான பாடங்களுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை தேர்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    தேர்வு அட்டவணையை cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    இந்த தேர்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 45 லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    ×