என் மலர்tooltip icon

    இந்தியா

    அமெரிக்காவில் இருந்து  நாடுகடத்தப்பட்ட  2,790 இந்தியர்கள் - மத்திய அரசு தகவல்
    X

    அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட 2,790 இந்தியர்கள் - மத்திய அரசு தகவல்

    • பிரிட்டனில் இருந்து இந்த ஆண்டு சுமார் 100 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்
    • தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தனர்.

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்றது முதல் சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் செயல்முறையில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

    நாடுகடத்தப்படுபவர்கள் கைவிலங்கிடப்பட்டு மோசமாக நடத்தப்படுவது குறித்து பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

    இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 2,790 இந்தியர்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை நாடுகடத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், " இந்த ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் 29 வரை, தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 2,790க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர் " என்று தெரிவித்தார்.

    இதேபோல் பிரிட்டனில் இருந்து இந்த ஆண்டு சுமார் 100 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×