என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
X
திருப்பதியில் கடந்த மாதம் ரூ.125 கோடி உண்டியல் வசூல்
Byமாலை மலர்7 April 2022 5:07 AM GMT (Updated: 7 April 2022 5:07 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் ரூ.125 கோடி உண்டியல் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த மாதம் 19 லட்சத்து 72 ஆயிரத்து 656 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பதி
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் நிறுத்தப்பட்டது. ஜூன் மாதம் தொற்று பரவல் குறைந்ததையடுத்து. தினமும் 2,500 பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. இருப்பினும் 2 ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதனால் உண்டியல் வருவாய் கணிசமாக குவிந்தது. மீண்டும் கொரோனா 2-வது அலை பரவலாலும் உண்டியல் வருவாய் சரிவாகவே இருந்து வந்தது.
இந்தநிலையில் தொற்று பரவல் குறைந்ததால் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் கூடுதலாக ஆன்லைனில் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் மாதம் ரூ.300 ஆன்லைன் தரிசனத்தில் 30,000 பக்தர்களும் நேரடி இலவச தரிசனத்தில் 30,000 பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் விஐபி பிரேக் தரிசனம் ஸ்ரீவாணி அறக்கட்டளை உள்ளிட்ட சேவைகளில் தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கடந்த மாதம் 19 லட்சத்து 72 ஆயிரத்து 656 பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கை ரூ.125.81 கோடி வசூலானது. கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு கடந்த மாதம் மட்டும் உண்டியலில் ரூ.125 கோடி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
×