search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சாத்வி நிரஞ்சன் ஜோதி
    X
    சாத்வி நிரஞ்சன் ஜோதி

    80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக கூடுதல் உணவு தானியங்கள் விநியோகம்- மத்திய அரசு விளக்கம்

    பிரதமர் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 690 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக பதில்
    அளித்த மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் திருமிகு சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளதாவது:-

    பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 726 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, 690 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

    தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் 80 கோடி பயனாளிகளுக்கு அரிசி, கோதுமை உள்பட கூடுதல் உணவு தானியங்களை உணவு மற்றும் பொது விநியோகத்துறை இலவசமாக  வழங்கியது.

    மேலும், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் புலம் பெயரும் மக்களுக்கான பெயர்வுத்திறன் வசதியின் கீழ் சுமார் 10 சதவீத பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. 

    தமிழ்நாட்டில் பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 15,71,962 ஆகவும், மாநிலங்களுக்கிடையேயான பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 4,950 ஆகவும், மொத்த பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 15,76,912 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×