search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜ்நாத் சிங்
    X
    ராஜ்நாத் சிங்

    ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாதா?- ராஜ்நாத் சிங் கேள்வி

    பாகிஸ்தான், சீன உறவு பற்றி விமர்சித்த ராகுல்காந்திக்கு வரலாறு தெரியாதா? என்று ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கேள்வி எழுப்பினார்.
    மதுரா:

    உத்தரபிரதேச மாநிலம், மதுராவில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நிருபர்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது அவரிடம் சீன, பாகிஸ்தான் உறவு பற்றி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ள கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு ராஜ்நாத் சிங் பதில் அளிக்கையில் கூறியதாவது:-

    முன்னாள் பிரதமர் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆட்சியின்போது 2 பெரிய ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன.

    ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாதா?

    சீனாவுக்கு பாகிஸ்தான் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கை விட்டுக்கொடுத்தபோது நேருதான் பிரதமராக இருந்தார்.

    இது மட்டுமின்றி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் காரகோரம் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது பிரதமராக இருந்தவர், இந்திரா காந்திதான்.

    நீங்கள் (ராகுல் காந்தி), பா.ஜ.க.வின் வெளியுறவுக்கொள்கைதான் பாகிஸ்தானையும், சீனாவையும் நெருக்கமாக கொண்டு வந்துள்ளதாக கூறுகிறீர்கள்.

    சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் தொடங்கியது. இந்திய ராணுவத்தின் வீரம் பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்புதை மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×