search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பள்ளி வகுப்பறை
    X
    பள்ளி வகுப்பறை

    மகாராஷ்டிராவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு -மாணவர்கள் உற்சாகம்

    பள்ளிகள் திறக்கப்பட்டாலும், அனைவரும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால் ஜனவரி முதல் வாரம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால், இதற்கு பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பள்ளிகளை மூடுவதால் மாணவர்களை மோசமாக பாதிக்கும் என பெற்றோர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையிலும், ஒமைக்ரான் தாக்கம் பெரிய அளவில் இல்லாததாலும் ஜனவரி 24ம் தேதியில் இருந்து பள்ளிகளை திறக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிக்கை அளித்தது. இதற்கு முதல்வர் உத்தவ் தாக்கரே ஒப்புதல் அளித்தார். 

    இதையடுத்து மாநிலம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றன. மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். 

    மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வித்துறை அமைச்சர் கெய்க்வாட் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்கள் மீண்டும் பாதுகாப்பான சூழ்நிலையில் வகுப்பறைகளுக்குச் செல்வதில் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

    பள்ளிகள் திறக்கப்பட்டாலும், அனைவரும் கொரோனா தடுப்பு  நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமையன்று மகாராஷ்டிராவில் 40,805 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஒமைக்ரான் பாதிப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×