search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சுவாமி பிரசாத் மவுரியா உடன் அகிலேஷ் யாதவ்
    X
    சுவாமி பிரசாத் மவுரியா உடன் அகிலேஷ் யாதவ்

    யோகி ஆதித்யநாத்துக்கு அதிர்ச்சி கொடுத்த மந்திரி: அகிலேஷ் யாதவ் கட்சியில் இணைந்தார்

    உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜனதா மந்திரி சுவாமி பிரசாத் மவுரியா சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார்.
    உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 10-ந்தேதியில் இருந்து ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்க யோகி ஆதித்யநாத் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களை உ.பி. மாநிலத்தில் தொடங்கி வைத்தார்.

    வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யும் பணிக்கு பா.ஜனதா அரசு ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் பா.ஜனதா கட்சிக்கு சறுக்கல் ஏற்படும் வகையில் அந்த கட்சியின் எம்.எல்.ஏ.-வும், மந்திரியுமான சுவாமி பிரசாத் மவுரியா மந்திரி, எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார்.

    மவுரியாவுடன் மேலும் சில தலைவர்கள் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்துள்ளார். நேற்று கோவா மாநிலத்தில் பா.ஜனதா மந்திரி ஒருவர் கட்சி மாறிய நிலையில் தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் மந்திரி ஒருவர் கட்சி மாறியுள்ளது பா.ஜனதாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    சுவாமி பிரசாத் மவுரியா உடன் மேலும் ஒரு எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    Next Story
    ×