search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swami Prasad Maurya"

    • மதம், சாதி, இனம், உலகத்தில் உள்ள எந்தவொரு நாடு என எங்கேயும் குழந்தைகள் இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு காதுகள்,
    • இரண்டு கண்கள், இரண்டு துளை உள்ள மூக்கு ஆகியவற்றுடன்தான் பிறக்கின்றன. ஒரு பின்பகுதி, ஒரு தலை, ஒரு வயிறுடன்தான் பிறக்கின்றன.

    சமாஜ்வாடி கட்சி தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி மாட்டிக்கொள்வது உண்டு. முன்னதாக பத்ரிநாத் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

    தற்போது கடவுள் லட்சுமி தேவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இவருடைய பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சியில் உள்ளவர்களே எதிர்ப்பு தெரிவித்து, கட்சிக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வகையில் பேசுவதை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.

    சுவாமி பிரசாத் மவுரியா நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் "மதம், சாதி, இனம், உலகத்தில் உள்ள எந்தவொரு நாடு என எங்கேயும் குழந்தைகள் இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு காதுகள், இரண்டு கண்கள், இரண்டு துளை உள்ள மூக்கு ஆகியவற்றுடன்தான் பிறக்கின்றன. ஒரு பின்பகுதி, ஒரு தலை, ஒரு வயிறுடன்தான் பிறக்கின்றன.

    இந்த தேதிவரை நான்கு கைகள், எட்டு கைகள், பத்து கைகைள், இருபது கைகள், ஆயிரம் கைகள் கொண்ட குழந்தை பிறக்கவில்லை என்கிறபோது, நான்கு கைகளுடன் எப்படி லட்சுமி தேவி பிறக்க முடியும்?" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    நீங்கள் கடவும் லட்சுமி தேவியை வழிபட விரும்பினால், கடவுளுக்கு உண்மையான அர்த்தமான உங்களுடைய மனைவிக்கு மரியாதை கொடுங்கள். மனைவியை வழிபடுங்கள். ஏனென்றால் வீட்டின் வளர்ச்சி, மகிழ்ச்சி, உணவு, குடும்பத்தை மிகுந்த பக்தியுடன் பார்த்துக் கொள்ளுதல் போன்றவற்றை நிறைவேற்றுகிறார்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    கடவுள் லட்சுமி தேவியை பற்றி குறிப்பிட்டிருந்த அவரது கருத்தை, சமாஜ்வாடி கட்சியில் உள்ளவர்களே விரும்பவில்லை. அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ஐ.பி. சிங், "கட்சிக்கு தீங்கு விளைவிக்கின்ற இதுபோன்ற கருத்துகளை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு கட்சி பொறுப்பு ஏற்காது. இது அவருடைய தனிப்பட்ட பார்வை. ஐந்து வருடங்களாக பா.ஜனதாவின் கேபினட் மந்திரியாக இருந்தபோது, கடவுள் லட்சுமி தேவி, கடவுள் கணபதி குறித்து அநாகரீகமான கருத்துக்களை கூற நீங்கள் பயந்தீர்கள். கட்சிக்கு தீங்கு விளைவிப்பதை நிறுத்துங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    சுவாமி பிரசாத் மவுரியா கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ×