search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நெரிசல் மிகுந்த பகுதி
    X
    நெரிசல் மிகுந்த பகுதி

    27 மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் -மத்திய அரசு அறிவுறுத்தல்

    27 மாவட்டங்களில் தொற்று அதிகம் உள்ளதால் அந்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார்.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவ்வகையில், கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    நாடு முழுவதும் 27 மாவட்டங்களில் தொற்று அதிகம் உள்ளதால் அந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார். 

    அதிக அளவில் கொரோனா தொற்று பரவும் பகுதிகளில், இரவு நேர ஊரடங்கு உத்தரவு, மக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்துதல், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பவர்களைக் குறைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடிதத்தில் கூறி உள்ளார்.
    Next Story
    ×