search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா கட்டுப்பாடு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற உறுதிமொழி படிவத்தையும் பயணிகள் வழங்க வேண்டும்.
    • பயண அனுமதிச் சீட்டு வழங்கும் போது உரிய சான்றிதழைப் பயணிகள் பதிவேற்றியுள்ளார்களா என்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 6 நாடுகளின் பயணிகளுக்கு கொரோனா பாதிப்பின்மை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டு விதிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

    சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகள் கொரோனா பாதிப்பின்மை சான்றிதழை வழங்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    புதிய கட்டுப்பாடு நாளை (ஜனவரி 1) முதல் அமலுக்கு வரவுள்ளது. பயணத்தைத் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கையை ஏர் சுவிதா வலைதளத்தில் பதிவேற்ற 6 நாடுகளின் பயணிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மேற்கண்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது. அதில் சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகள் ஏர் சுவிதா வலைதளத்தில் கொரோனா பாதிப்பின்மை சான்றிதழை தாமாகப் பதிவேற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற உறுதிமொழி படிவத்தையும் பயணிகள் வழங்க வேண்டும். அவற்றை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நாடுகளின் பயணிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கும் நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பயண அனுமதிச் சீட்டு வழங்கும் போது உரிய சான்றிதழைப் பயணிகள் பதிவேற்றியுள்ளார்களா என்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த சுற்றறிக்கையானது அனைத்து வர்த்தக விமான நிறுவனங்கள், விமான நிலைய நிர்வாகிகள், மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • தேனி மாவட்டத்தில் மாவட்டத்தில் தற்போது முககவசம் அணியாமல் இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.
    • பஸ்நிலையம், கடைவீதி போன்ற பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்படுவதை போன்று இங்கு பொதுமக்கள் அச்சமின்றி சுற்றி வருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் உழவர்சந்தையில் சுமார் 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பல்வேறு ஊர்களில் இருந்து இங்கு பொதுமக்கள் காய்கறிகளை மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கிச்செல்கின்றனர். இதற்காக அதிகாலை 5 மணிமுதல் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். மேலும் 10 பேருக்கு மேல் கூடினால் சமூகஇடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் கம்பம் உழவர்சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யாருமே முககவசம் அணிவது இல்லை. கூட்டம் கூட்டமாக கடைகள் முன்பு கூடி காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர்.

    அங்குள்ள அதிகாரிகளும் இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். பஸ்நிலையம், கடைவீதி போன்ற பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்படுவதை போன்று இங்கு பொதுமக்கள் அச்சமின்றி சுற்றி வருகின்றனர். எனவே அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • விமான போக்குவரத்து இயக்குனரகம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
    • கூடுதல் முக கவசங்களை விமான நிறுவனங்கள் வழங்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

    புதுடெல்லி :

    நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு பொது இடங்களில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது. இதன்படி, விமான பயணிகள் கைகளை சுத்தமுடன் வைத்திருத்தல், முக கவசங்களை அணிதல் உள்ளிட்ட பயணத்தின்போது மேற்கொள்ள வேண்டிய கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்கும்படி தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.

    இதேபோன்று, கடந்த 3ந்தேதி, விமான நிலையங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக அமல்படுத்தப்படுவது பற்றி விமான போக்குவரத்து இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ.) உறுதி செய்ய வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து விமான போக்குவரத்து இயக்குனரகம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. இதன்படி, அனைத்து விமான பயணிகளும் முக கவசங்களை அணிவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், தங்களுடைய பயணம் முழுவதும் பயணிகள் அவற்றை அணிந்திருக்கவும் உறுதி செய்திடல் வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    சில விதிவிலக்கான சூழ்நிலைகளில், அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே முக கவசங்களை நீக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமானங்களில் பயணிகள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்கும்படி தொடர்ந்து நிறுவனங்கள் அறிவிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

    தேவைப்பட்டால், கூடுதல் முக கவசங்களை விமான நிறுவனங்கள் வழங்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது. ஒருவேளை மேற்கூறிய அறிவுரைகளை பின்பற்ற தவறும் எந்த பயணியாக இருப்பினும், தொடர்ச்சியான எச்சரிக்கைக்கு பின்னரும் கடைப்பிடிக்காத நபர்கள் (ஆண் அல்லது பெண்) உடனடியாக, விமானம் புறப்படுவதற்கு முன்பு கீழே இறக்கி விடப்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், தற்போது தளர்வுகள் அளித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. பின்னர், பொருளாதார வீழ்ச்சியை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளித்தன. ஆனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள், தங்களது நாட்டு எல்லைகளை திறப்பதில் மிகவும் கவனமாக இருந்தன.

    இதனால் ஆஸ்திரேலியா செல்லும் வெளிநாட்டினருக்கு சிரமம் ஏற்பட்டது. மாணவர்கள் தங்களுடைய படிப்பை தொடர முடியாமல் தவித்தனர்.

    தற்போது பெரும்பாலான நாடுகள், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டால் அனுமதி அளித்து வருகின்றன. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா சமீபத்தில்தான் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுத்தது.

    இந்த நிலையில் டிசம்பர் 1-ந்தேதியில் இருந்து தகுதியான விசா வைத்திருப்பவர்கள், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஆஸ்திரேலியாவுக்கு தாராளமான வரலாம். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்வதற்கு சுற்றுப்பயண விலக்கு பெற வேண்டிய அவசியமில்லை என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

    ஆனால், அந்த நாட்டில்  நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
    ×