search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி
    X
    காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி

    சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி மக்களவையில் நோட்டீஸ்

    பாராளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடரின் 7-ம் நாளான இன்று பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்தில் குளிர்க்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    கூட்டத்தொடரின் 7-ம் நாளான இன்று நாட்டின் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    இதற்கிடையே, எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை சமர்ப்பித்து வருகின்றனர்.

    இந்திய பாராளுமன்றம்

    இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் மற்றும் டோக்லாம் அருகே உள்ள பகுதிகளை சீனா ஆக்கிரமித்து கிராமங்களை அமைத்து வருவதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி எம்.பி. மணீஷ் திவாரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை சமர்ப்பித்து உள்ளார்.

    இதையும் படியுங்கள்.. உத்தரபிரதேசத்தில் 3 மெகா திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
    Next Story
    ×