search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு

    கொரோனா பாதிப்பால் கேரளாவில் 120, மகாராஷ்டிராவில் 59 பேர் உள்பட நேற்று 248 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்தபலி எண்ணிக்கை 4,50,375 ஆக உயர்ந்தது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் புதிதாக 19,740 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

    இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 39 லட்சத்து 35 ஆயிரத்து 309 ஆக உயர்ந்தது. கடந்த 6-ந் தேதி 22,431, 7-ந் தேதி 21,257 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது.

    நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 10,944, மகாராஷ்டிராவில் 2,620, தமிழ்நாட்டில் 1,359, மிசோரத்தில் 950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா பாதிப்பால் கேரளாவில் 120, மகாராஷ்டிராவில் 59 பேர் உள்பட நேற்று 248 பேர் இறந்துள்ளனர்.

    இதனால் மொத்தபலி எண்ணிக்கை 4,50,375 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 1,39,470 பேர் அடங்குவர்.

    நோயின் பிடியில் இருந்து மேலும் 23,070 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 48 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது.

    தடுப்பூசி

    கடந்த 206 நாட்களில் இல்லாத அளவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,36,643 ஆக குறைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 1,17,237 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    நாடு முழுவதும் நேற்று 79,12,202 டோஸ்களும், இதுவரை மொத்தம் 93.99 கோடி டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.


    Next Story
    ×