search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 18,833 பேருக்கு தொற்று

    கொரோனா பாதிப்பால் கேரளாவில் 151, மகாராஷ்டிராவில் 39 பேர் உள்பட நேற்று 278 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,49,538 ஆக உயர்ந்தது.
    புதுடெல்லி:

    கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 38 லட்சத்து 71 ஆயிரத்து 881 ஆக உயர்ந்தது.

    நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 9,735, மகாராஷ்டிராவில் 2,401, தமிழ்நாட்டில் 1,449, மிசோரத்தில் 1,471 பேருக்கு தொற்று உறுதியானது.

    கொரோனா பாதிப்பால் கேரளாவில் 151, மகாராஷ்டிராவில் 39 பேர் உள்பட நேற்று 278 பேர் இறந்துள்ளனர்.

    இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,49,538 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,39,272 பேர் அடங்குவர்.

    நோய் பாதிப்பில் இருந்து மேலும் 24,770 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சத்து 75 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்தவகையில், தற்போது 2,46,687 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தைவிட 6,215 குறைவு ஆகும்.

    தடுப்பூசி


    நாடு முழுவதும் நேற்று 59,48,360 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 92 கோடியே 17 லட்சத்தை கடந்துள்ளது.

    இதற்கிடையே நேற்று 14,09,825 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை மொத்தம் 57.68 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.


    Next Story
    ×